Tamilnadu Government Monthly 1000 Scheme
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது தமிழக அரசு அறிவித்த மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை ஆனது மிகவும் எதிர் பார்ப்புடன் இருந்தது. அதுமட்டும் இல்லாமல் முதலில் மக்கள் அனைவருக்கும் யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் என்ற குழப்பங்கள் இருந்து. இவ்வாறு ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசு யாரெல்லாம் இந்த தொகையினை பெற தகுதி உடையவர்கள் என்று அறிவித்தது. அந்த வகையில் தற்போது மக்கள் எதிர்பார்த்த மாதிரியான ஒரு நியூஸ் ஆனது வந்து இருக்கிறது. அது என்ன நியூஸ் என்றும் மாதம் 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவித்த குட் நியூஸ்..! என்னனு தெரியாத.
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை:
யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் என்ற கேள்விக்கான பதிலை தமிழக அரசு ஆனது அறிவிப்பு மூலம் தெரிவித்தது.
அதாவது குடும்பத்தலைவியின் பெயரில் ரேஷன் இருக்க வேண்டும், அதேபோல் ஆண்டு வருமானம் 2,50,000 ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என்றும் அறிவித்து இருந்தது.
அதேபோல் இந்த உரிமைத் தொகை செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இதற்கான விண்ணப்பங்களும் தமிழகம் முழுவதும் பெறப்பட்டது. மேலும் மொத்தமாக 1 கோடி 64 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் இதற்கான ஒரு ஆய்வாக கள ஆய்வு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்தகட்ட நிலையாக இத்தகைய தொகை வழங்குவதற்கான இறுதிப் பட்டியல் ஆனது செப்டம்பர் மாதம் 5-க்குள் தயார் நிலைக்கு வந்துவிடும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
கடைசியாக பட்டியல் தயார் ஆன பிறகு விண்ணப்பித்த அனைத்து நபர்களுக்கும் உரிமை தொகை உண்டா..? கிடையாதா..? என்ற செய்தி SMS மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |