ரேஷன் கார்டு
இந்திய நாட்டில் பிறந்தவர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் ஏதோ ஒரு அடையாளம் உள்ளது. நம்முடைய இந்திய நாட்டில் நமக்கு என்று அடிப்படையாக சில ஆவணங்களை முக்கியமாக கருதுகின்றனர். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் பான் கார்டு போன்றவை மிகவும் முக்கியமான கருத்துப்படுகிறது. இத்தகைய ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அதனை சரிசெய்வதற்காக பெரும்பாடுபடுவார்கள். அதுபோல இவற்றில் சில விதிமுறைகளும் உள்ளது. ஆனால் நாம் மாதந்தோறும் நியாவிலை கடையில் ரேஷன் கார்டை வைத்து சில பொருட்கள் வாங்கி வருகின்றோம். அத்தகைய ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் சேர்த்தல் போன்ற சில விஷயங்கள் உள்ளது. ஆகவே இன்று அதனை எப்படி மிகவும் எளிமையான முறையில் பெயர் நீக்கம் செய்வது என்று பார்க்கப்போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அரசு ஊழியர்களுக்கு அமல்..! குட் நியூஸ் இதோ உங்களுக்காக..!
ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்வது எப்படி..?
புதிதாக ரேஷன் கார்டு பெறுவது, கார்டில் பெயர் நீக்கம் செய்வது மற்றும் பெயர் சேர்ப்பது இதுபோல எதுவாக இருந்தாலும் அதனை செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
சிலருக்கு இதனை செய்து முடிப்பதற்கு சில வருடங்கள் கூட ஆகிறது. இனி நீங்கள் இதுபோல ஆகாமல் இருப்பதற்கு இப்போது ஒரு குட் நியூஸ் உங்களுக்காக வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால் நீங்கள் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்தல் போன்றவற்றை ஆன்லைன் மூலம் நீங்கள் எளிய முறையில் செய்யலாம். அதற்கான சில விதிமுறைகளும் கொடுப்பட்டுள்ளது.
அப்ளை செய்யும் முறை:
- முதலில் நீங்கள் TN PDS என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின்பு அதில் உங்களுடைய மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்து அதில் கேட்கப்பட்டு இருக்கும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
- இப்போது ரேஷன் கார்டில் யாருடைய பெயரை நீக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அதன் பிறகு அதில் கேட்கப்படும் சான்றிதழ் மற்றும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
- கடைசியாக அனைத்தையும் சரி பார்த்து Submit கொடுத்தால் போதும். பெயர் நீக்கம் ஆகிவிடும்.
இந்த குட் நியூஸ் யாருக்கு தெரியாமல் இருக்கு உடனே தெரிஞ்சுக்கோங்க. உங்களுடைய நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்தி உங்களுடைய வேலையை எளிதாக முடித்து விடுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உரிமை தொகை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரியுமா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |