மகளிர் உரிமை தொகை பட்ஜெட் 2025
இந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட்டில் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களையும், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பட்ஜெட்டையும், உரிமை தொகை பெரும் பட்டியல்களையும் வெளியிட்டது. இதில் பல்வேறு மாற்றங்களையும் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
குடும்பத்தில் உள்ள பெண்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த தொகையை வைத்து நிறைய குடும்பங்களை தங்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். மகளிர் உரிமை தொகை திட்டம் பல்வேறு குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக கொண்டுவந்த மட்டர்ன்கள் என்ன என்று இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
மகளிர் உரிமை தொகை திட்டம் என்றால் என்ன:
மகளிர் உரிமைத் தொகை என்பது, தமிழ்நாடு அரசால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 உரிமைத் தொகையாக வழங்கும் ஒரு திட்டமாகும். இதன் நோக்கம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே ஆகும். மகளிர் உரிமை தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கொண்டுவரப்பட்டது.
மகளிர் உரிமை தொகை பட்ஜெட் 2025:
2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பட்ஜெட் 13,807 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்காத இல்லத்தரசிகள் புதிதாக விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தற்போது மகளிர் உரிமைத்தொகையை 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேர் பெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
மகளிர் உரிமை தொகை பெற தகுதியற்றவர்கள்:
- ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சம் மேல் பெறுபவர்கள்
- வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர்கள்
- மாநில அரசு / மத்திய அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகள் / வாரியங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள்
- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர) பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
- சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள்
- ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கு மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா ஓய்வூதியம் பெறுபவர்கள்
- மேலும் ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்
- மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் மகளிர் உரிமை தொகை பெற தகுதியற்றவர்கள் என் ஆட்டமிழக்க அரசு அறிவித்துள்ளது.
இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 | News |