வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்? தகுதியான குடும்பங்களை கண்டறிவது எப்படி?

Updated On: July 8, 2023 7:09 AM
Follow Us:
TN Budget 2023 1000 for Women
---Advertisement---
Advertisement

யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்? TN Budget 2023 1000 for Women

கடந்த இரண்டு வருடங்களாக எதிர்பார்த்த அறிவிப்பு என்பதுநேற்று அதாவது (21.02.2023) அன்று தமிழக பட்ஜெட்டில் வெளியானது. அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் முதல் தகுதியான பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். இந்த தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதும் குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பெண்களுக்கெல்லாம் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்குவேன் என்று தற்பொழுது உள்ள தமிழக முதல்ரவர் ஸ்டாலின் தனது பிரச்சார கூட்டத்தில் திருச்சியில் அறிவித்தார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அறிவிப்பு எப்பொழுது செயல்படுத்தப்படும் என்று தொடர்ந்து பல கோரிகள் எழுந்து வந்தது. அந்த அறிவிப்பு தற்பொழுது வெளியானது. இருப்பினும் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று சொன்னதில் தற்பொழுது தகுதியான குடும்ப தலைவிக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அந்த வகையில் இது யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து அரசு கூடிய விரைவில் அறிவிக்கும். இருப்பினும் இந்த பதிவில் யாருக்கெல்லாம் இந்த தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

மாதம் 1000 ரூபாய் பெற தகுதிவாய்ந்த குடும்பம் எவை? – TN Budget 2023 1000 for Women

இந்த நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறேன் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் செப்டம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை 7000 கோடி என்றால் மாதம் 1000 கோடி செலவு என்று வைத்துக்கொள்வோம். ஆக மாதம் 1 கோடி குடும்பங்கள் பயன்பெற வாய்ப்பு இருக்கிறது. இது ஒரு அடிப்படை கால்குலேஷன் ஆகும். இது நமது அடிப்படை புரிதலுக்காக சொல்லப்பட்டுள்ளது.

அந்த 1 கோடி குடும்பங்களை எப்படி தேர்வு செய்வது?

தமிழ்நாட்டில் மொத்தம் 4 வகையான குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த குடும்ப அட்டை மட்டும் 2.2 கோடி குடும்ப அட்டை உள்ளது. அந்தியோதயா குடும்ப அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, கௌரவ அட்டை என்று நான்கு வகையான பிரிக்கப்படுகிறது. இவற்றில்..

  1. அந்தியோதயா குடும்ப அட்டை உள்ளவர்கள் 18,64,201 நபர்களும்.
  2. அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் 1,98,24,931 நபர்களும்.
  3. சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் 3,83,756 நபர்களும்
  4. மற்றும் கௌரவ அட்டை வைத்திருப்பவர்கள் 53,146 நபர்களும் உள்ளனர்.

மேல் கூறப்பட்டுள்ள நான்கு வகைகளுள் எந்தெந்த வகையினரும் 1000 ரூபாய் உரிமை தொகை பொருந்தும். எந்தெந்த வகையினரும் பொருந்தாது என்பதும் குழப்பமாக உள்ளது.

அதிலும் அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் 2 கோடி நபர்கள் உள்ளன. அவையும் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. அது என்னவென்றால் முன்னுரிமை அட்டை மற்றும் முன்னுரிமை இல்லாத அட்டை. இதில் முன்னுரிமை அட்டைகளுக்கு மட்டும் தான் 1000 ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதாவது அரிசி அட்டை வைத்திருப்பவர்களில் பின் தங்கிய பிரிவினர் தனியாக பிரிக்கப்பட்டு முன்னுரிமை குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பழங்குடியினர், ஆதரவற்றோர், விதவைகள் ஆகியோர் முன்னுரிமை பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழக மக்களே வீடு, நிலம் வாங்க போறீங்களா..! அப்போ உங்களுக்கு ஒரு அருமையான செய்தி காத்திருக்கிறது அது என்ன தெரியுமா..?

யாருக்கெல்லாம் கிடைக்க வாய்ப்பு இல்லை?

குடும்பத்தில் ஒரு நபர் வருமான வரி செலுத்தினாலும் அந்த குடும்பத்திற்கு இந்த தொகை வழங்க வாய்ப்பு இல்லை. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த தொகை வழங்க வாய்ப்பு இல்லை. பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இந்த தொகை வழங்கப்படாது. சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இந்த தொகை வழங்கப்படாது.

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் முன்னுரிமை இல்லாத அட்டை தரர்களுக்கும், சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கும், கௌரவ அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த தொகை வழங்க வாய்ப்பு இல்லை.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now