மழை நிவாரண தொகை அறிவிப்பு.. யாருக்கு எவ்வளவு நிவாரணம் தொகை?

TN Government Announces Relief Fund Details

மழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை நிவாரண தொகை அறிவிப்பு | TN Government Announces Relief Fund Details

தமிழகத்தில் பல நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலை நாம் இந்த பதிவில் பார்க்கலாம். தொடர் மாலை காரணமாக பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள் மழைவெள்ளத்தால் மூழ்கியதுடன், வேளாண் நிலங்களும் சேதமடைந்தன. இதன் காரணமாக தற்பொழுது மழை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும், விவசாயிகளுக்கு நிவாரண குறித்து விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். யாருக்கு எவ்வளவு நிவாரண தொகை வழங்கப்படும் என்பதை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

உயிரிழப்பு:

மழைவெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு ரூபாய் 4 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும்.

மழை நிவாரண தொகை:

வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருந்தால் நிவாரண தொகை ரூபாய் 4,800/- வழங்கப்படும்.

குடுசை வீடு முழுவதும் சேதம் அடைந்திருந்தால் நிவாரண தொகை ரூபாய் 5,000/- வழங்கப்படும்.

கான்கீரிட் கட்டம் இடிந்திருந்தால் 95,000/- ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

பாதி அளவு மட்டும் சேதம் அடைந்த வீடு ஒன்றிற்கு ரூபாய் 5,200/- நிவாரண தொகை வழங்கப்படும்.

முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கான நிவாரண தொகை:

சமவெளியில் உள்ள வீடு ஒன்றிற்கு 95,000/- ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு 1,01,900/- ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

கால்நடை இறப்பு:

பசு எருமை மாடு ஒன்றிற்கு நிவாரண தொகை 30000 ரூபாய் வழங்கப்படும்.

செம்மறி ஆடு, ஆடு, பன்றி போன்றவற்றிக்கு 3000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

எருது ஒன்றிற்கு ரூபாய் 25,000/- நிவாரண தொகை வழங்கப்படும்.

கன்றுக்குட்டி ஒன்றுக்கு 16,000/- ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

கோழி ஒன்றிக்கு 100/- ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉News in Tamil