2024 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு!

Advertisement

 Tnpsc Exam Time Table 2024 in Tamil

நம்மில் பலருக்கும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, காரணம் நிரந்தரமான வேலை சம்பளம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. அரசு வேலை  தேர்விற்காக பலரும் தயார் ஆகி வருகிறார்கள்.

சாதாரணமாக பள்ளி படிக்கும் போதே தேர்வு எப்போது வரும் என்ற ஆர்வம் இருக்கும், தேர்வு வரும் தேதி வந்தவுடன் பயம் ஒரு பகுதி இருந்தாலும் அதற்கான பிரிபேரேஷனை அதிகப்படுத்துவோம். அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்வோம்வாங்க..

2024 டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை: 

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி பல பேருக்கு வேலையும், காலியாக உள்ள இடத்தையும் நிரப்பி வருகிறது.  இதில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் தற்போது தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு டி.என்.பி.எஸ்.சி வழியாக செய்யப்படுகிறது.

2024-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் 19 வகையான தேர்வுகள் இடம் பெற்றுள்ளது. இதனை பற்றி காண்போம்.

எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

வனக்காவலர்:

1264 வனக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.

குரூப் 1:

குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். குரூப் 1 தேர்வு 65 பணியிடங்களுக்கு நடத்தப்படும்.

அடுத்தப்படியாக ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 467 இடங்களுக்கு, ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடைபெறும்.

118 வனவர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும்.

குரூப் 2:

குரூப் 2, 2ஏ தேர்வு 1294 பணியிடங்களுக்கு நடத்தப்படும். தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும்.

ஒருங்கிணைந்த அறிவியல் பணிகளில் 96 இடங்களுக்கும், புள்ளியியல் சார்நிலை பணிகளில் 23 இடங்களுக்கும் ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும்.

Tnpsc Annual Planner 2024 in Tamil:

2024 டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை 

2024 பொங்கல் பரிசுதொகுப்பு மற்றும் டோக்கன் தேதி!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement