அத்தியாவசிய பொருட்கள் வரி வரிசையில்..! சுங்கச்சாவடி கட்டணமும் உயர்வு..!

Advertisement

சுங்கச்சாவடி கட்டணம் திடிர் உயர்வு 

நண்பர்களே வணக்கம் தினமும் தோறும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்களை பற்றி பார்த்திருப்போம். அந்த வரிசையில் இன்று அரசு உயர்த்தி உள்ள சுங்கச்சாவடி வரி கட்டணத்தை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விலை உயர்த்திய நிலையில் இப்போது சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தி உள்ளார்கள். அதனை பற்றி தெளிவாக படித்தறிவோம்.

சுங்கச்சாவடி கட்டணம்:

இந்தியாவில் கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் இந்தியா முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகப்படியான சுங்கச்சாவடிகள் தமிழ் நாட்டில் தான் உள்ளது. அதாவது 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. வருடம் வருடம் சுங்கச்சாவடி வரி கட்டணத்தை உயர்த்தி வருவதை ஆண்டு தோறும் பழக்கமாக வைத்திருக்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்திய நிலையில் திடீர்ரென்று செப்(1) தேதி முதல் தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், ஓமலூர், கரூர் போன்ற 28 சுங்க சாவடிங்களில் இரவு முதல் சுங்க கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க வேண்டும் என தேசிய நெடுசாலை ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

இவ்வாறு இதன் படி  கார், வேன், ஜீப்புகளுக்கு 5 ரூபாயும் டிரக், பேருந்து மற்றும் சக்கரங்கள் அதிகம் உள்ள வாகனங்களுக்கு 15 % சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால்.  அத்தியாவசிய பொருட்களை போல் இதற்கும் கட்டணத்தை உயர்த்தி உள்ளதை மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகியுளார்.

இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வாகனங்களுக்கு கட்டணத்தை உயர்த்தி அதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அதிகம் விலை உயரவும் சூழ்நிலை உருவாகவும் வழியாக இந்த சுங்கக்கட்டண வரி இருக்கிறது.

எனவே சாலை பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு. வருகின்ற நிலையில் விதிகளுக்கு ஏற்ற வகையில் சுங்கச்சாவடிகளை குறைக்கவேண்டும் என்று   தமிழக அரசுக்கு  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement