இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..! ரிசல்ட் பார்ப்பது எப்படி?

Advertisement

இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..! 10th Result Time 2023..!

2022-23 ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20ம் தேதி நடைபெற்றது. 9,38,291 பேர் தேர்வு எழுதினர். அதேபோல் 2022-23 ம் கல்வியாண்டிற்கான 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3,60,908 மாணவர்கள், 4,12,779 மாணவிகள் என மொத்தமாக 7,73,688 பேர் தேர்வு எழுதினர் இந்த இரண்டு வகுப்பிற்கான முடிவுகள் இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இன்ற இரண்டு வகுப்பிற்கான முடிவுகள் எத்தனை மணிக்கு வெளியாகும், ரிசல்ட் பார்ப்பது எப்படி என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் இந்த பதிவின் மூலமாக படித்தறியலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

10th Result Time 2023:

10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கும், வெளியிடப்படும்.

11th Result Time 2023:

11 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியிடப்படும்.

ரிசல்ட் பார்ப்பது எப்படி?

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கூகுள் Gmail அக்கவுண்டை Delete செய்ய போகிறதா..? அப்போ யாருடைய அக்கவுண்ட் எல்லாம் Delete ஆகும் தெரியுமா..?

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement