சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுமா? Tomorrow school leave news in tamil
பொதுவாக மழை காலம் வந்துவிட்டது என்றாலே போதும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் எதை பார்க்கிறார்களோ இல்லையோ செய்தியை தவறவிடாமல் பார்ப்பார்கள். ஆகாரணம் இன்று பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மிக அருவமுடன் பார்ப்பார்கள். ஆக தமிழகத்தில் தற்பொழுது பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பதிவாகியுள்ளது.
Tomorrow school leave news in tamil:
இதனிடையே, நேற்று (29.11.2023) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2023) காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை டிசம்பர் 1-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (நவ.30) சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை 01.12.2023 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என பெற்றோர் மற்றும் மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கூகுள் மேப்பின் புதிய அம்சம் பாத்தா சும்மா அசந்து போயிடுவீங்க..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |