Top 5 Bank for Home Loan in Tamil
இந்த உலகில் உள்ள அனைவருக்குமே.. எப்படியாவது சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களது கனவுகளை நிறைவேற்றுவதற்காகவே பல வங்கிகள் வீடு கட்ட கடன் வழங்குகிறது. அந்த வகையில் வீட்டுக் கடன் வாங்க ஐந்து சிறந்த வங்கிகளை பற்றியும், அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்:
- வங்கியை அணுகுவதற்கு நீங்கள் எளிமையாக இருக்க வேண்டும்.
- நடைமுறை சிக்கல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- அதிக Processing Charges கட்டணம் இருக்க கூடாது.
- குறைவான வட்டி இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- Free Closer வசதி இருக்க வேண்டும்.
இந்தியன் வங்கி வீட்டு கடன் – Indian Bank Home Loan in Tamil:
வீட்டு கடன் வாங்க நினைப்பவர்கள் இந்தியன் வங்கியை தேர்வு செய்யலாம். ஏன் என்றால் இந்தியன் வங்கியில் உள்ள அலுவலர்களையும், மேல் அதிகாரிகளையும் அணுகுவதற்கு கொஞ்சம் எளிமையாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த வங்கியில் வீட்டு கடன் வட்டி 7.40%-8.45% p.a ஆகும். அதேபோல் கடன் செலுத்துவரத்தக்கன ஆண்டு 30 ஆண்டுகள் ஆகும். இந்த வங்கியில் 1.00% குறைவான அளவில் மட்டுமே Processing Charges கட்டணம் வாங்கப்படுகிறது என்பதால். வீட்டு கடன் வாங்க இந்தியன் வங்கியை தேர்வு செய்யலாம்.
வட்டி | 7.40%-8.45% p.a. (தோராயமாக) |
கடன் காலம் | 30 ஆண்டுகள் |
கடன் தொகை | சொத்து மதிப்பில் 90% வரை |
Processing Charges | கடன் தொகையில் 1.00% வரை |
SBI வங்கி வீட்டு கடன் – SBI Bank Home Loan in Tamil:
இந்தியாவிலேயே மிக பெரிய மற்றும் டாப் ஒன் வங்கிகளில் ஒன்றாகும். இந்த SBI வங்கியிலும் குறைந்த வட்டி மற்றும் குறைந்த Processing Fee வசூலிக்கப்படுகிறது. அதன் தகவலை கீழ் அட்டவணையில் காணலாம் வாங்க.
வட்டி | 7.55% p.a. – 9.70% p.a (தோராயமாக) |
கடன் காலம் | 30 ஆண்டுகள் |
கடன் தொகை | – |
Processing Charges | கடன் தொகையை பொறுத்து ₹ 2,000 – ₹ 10,000 வரை வாங்கப்படும் |
இருப்பினும் SBI வங்கியில் மேல் அதிகாரிகளை அவ்வளவு எளிதாக அணுக முடியாது. இருப்பினும் நீங்கள் வீட்டு கடன் வாங்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதற்கான செயல்பாடுகள் கொஞ்சம் தாமதம் ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி?
கனரா பேங்க் Canara Bank Home Loan in Tamil:
மூன்றாவதாக பார்க்க இருப்பது கனரா பேங்க் ஆகும். கனரா வங்கி வீட்டு கடன் வழங்குவதில் சிறந்த வங்கி என்று சொல்லலாம். குறிப்பாக இந்த வங்கியில் Free Closer வசதியும் இருக்கிறதாம். குறைந்த அளவிலேயே Processing Charges-ம் வாங்கிக்கிறார்களாம். ஆகவே நீங்கள் வீட்டு கடன் வாங்க கனரா வங்கியை தேர்வு செய்யலாம்.
வட்டி | 6.90% – 8.90% |
கடன் காலம் | 30 ஆண்டுகள் |
கடன் தொகை | 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை |
Processing Charges | 0.50% (Max ₹10,000) |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 வெறும் 5,000/- ரூபாயில் நாமும் POST OFFICE தொடங்கலாம்..! இந்தியா போஸ்ட் அசத்தல் அறிவிப்பு!
HDFC வங்கி வீட்டு கடன் – HDFC Bank Home Loan in Tamil:
HDFC வங்கி ஒரு பைனான்சியல் சம்மந்தமான வங்கி என்றாலும். இதுவும் வங்கி வரிசையில் இடம்பெற்றுள்ளது என்பதால் ஒரு நண்பகத்தன்மையான வங்கி என்று சொல்லலாம்.
வட்டி | 7.55% – 8.05% (தோராயமாக) |
கடன் காலம் | 30 ஆண்டுகள் |
கடன் தொகை | 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை |
Processing Charges |
Repco வங்கி வீட்டு கடன் – Repco Bank Home Loan in Tamil:
இறுதியாக பார்க்க இருப்பது Repco பேங்க் ஆகும். தாயகம் திரும்பியோர் கூட்டுறவு மற்றும் நிதி மற்றும் வளர்ச்சி வங்கி அல்லது ரெப்கோ வங்கி 1969ஆம் ஆண்டில் இந்திய அரசால் துவக்கப்பட்ட ஒரு கூட்டுறவு வங்கியாகும்.
வட்டி | 8.25% (தோராயமாக) |
கடன் காலம் | 20 ஆண்டுகள் |
கடன் தொகை | 10 லட்சம் |
Processing Charges | 1% |
Prepayment/ Fore Closure | 0% – 2% |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெரும் அஞ்சலகத்தின் அசத்தலான திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |