New Rule From Mobile Calling To Sms in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட் போனின் பயன்பாடு எந்தளவிற்கு அதிகரித்து இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். உலகமே உள்ளங்கையில் தான் இருக்கிறது என்று சொல்வதற்கு முக்கிய காரணமே ஸ்மார்ட் போன் தான். அதனால் போன்கள் நம் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருக்கிறது. அப்படி போன் பயன்படுத்தும் அனைவருக்கும் மே 1 முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. அது என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
அமலுக்கு வரும் புதிய விதி என்ன..!
பொதுவாக நாம் பயன்படுத்தும் போனில் சில போலியான அழைப்புகள் மற்றும் SMS -கள் வருவதை நாம் பார்த்திருப்போம். அதை சரி செய்யும் விதமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது.
புதிய விதிகளின் படி, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்க இருக்கிறது. இந்த விதி மே 1, 2023 முதல் போன்களில் வரும் போலி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது. இதன் காரணமாக போன் பயனர்கள் போலியான அழைப்புகள் மற்றும் SMS காலில் இருந்து விடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெளிவாக சொல்லப்போனால், அமலுக்கு வரும் புதிய விதி என்னவென்றால், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் SMS சேவைகளில் Artificial Intelligence Spam Builders -களை நிறுவ உத்தரவிட்டுள்ளது.
அதன் காரணமாக போலி அழைப்புகள் மற்றும் போலியான SMS -களிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க இந்த Spam Builders உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு 1 கோடி நபர்கள் தேர்வு யார் தெரியுமா |
அதுபோல போலி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுக்க தொலைத்தொடர்பு ஆணையம் விதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் கீழ் 10 இலக்க மொபைல் எண்களுக்கு செய்யப்படும் விளம்பர அழைப்புகளை நிறுத்துமாறு அறிக்கை விடுத்துள்ளது.
இதை தவிர அழைப்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தை காண்பிக்கும் அழைப்பாளர் ஐடி அம்சத்தையும் தொலைத்தொடர்பு ஆணையம் கொண்டு வந்துள்ளது. இது போன் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ரேஷனில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் உங்கள் கார்டு உங்களுக்கு அல்ல
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |