Trai New Rules For Telecom Companies in Tamil
இந்திய தொலைத்தொடர்பு ஒருங்குமுறை ஆணையமானது (TRAI) இன்கம்மிங் கால்கள் தொடர்பான சட்டத்தை மே 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. அதேபோல் மே 1 ஆம் தேதி இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் நோக்கம் என்ன..? இந்த சட்டம் எந்தெந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பொருந்தும்..? அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா..? போன்ற விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Trai New Rules 2023 in Tamil:
புதிய சட்டம்:
ட்ராய் அறிவித்த புதிய சட்டமானது, முழுக்க முழுக்க தெரியாத எண்களில் இருந்து வரும் தேவையற்ற கால்கள் மற்றும் மெசேஜ்களுக்கு எதிரான சட்டமாகும் . இந்த புதிய சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் கம்பெனிகளுக்கும் பொருந்தும்.
ட்ராயின் புதிய அறிவிப்பின்படி, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கால் மற்றும் SMS சேவைகளில் AI Spam Filters (ஏஐ ஸ்பேம் ஃபில்டர்களை) பயன்படுத்த வேண்டும். அதாவது, ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL)போன்ற நிறுவனங்கள் தங்களுடைய கால் மற்றும் SMS சேவைகளில் AI Spam Filters -ஐ பயன்படுத்த வேண்டும் என்று ட்ராய் ஆணையிட்டுள்ளது.மேலும், இதை தவிர போலியான கால்கள் மற்றும் மெசேஜ் வழியாக ஏற்படும் சிக்கனல்களை கட்டுப்படுத்த, மோசடி செய்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் 10 இலக்க எண்களில் விளம்பரம் நிகழ்த்துவதை நிறுத்துமாறும் கூறியுள்ளது.
Airtel நிறுவனம் மேலும் 125 நகரங்களில் 5G சேவை துவங்கியுள்ளது..!
இச்சட்டத்தின் நோக்கம்:
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் AI Spam Filters மூலம் ஃப்ராடு (Fraud) மற்றும் ஹராஸ்மென்ட்டில் (Harassment) இருந்து நுகர்வோர்களை பாதுக்காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
AI Spam Filters எப்படி வேலை செய்யும்?
ஏஐ ஸ்பேம் ஃபில்டர்கள் ஆனது பல்வேறு சோர்ஸ்களில் (ஆதாரம்) இருந்து வரும் போலியான விளம்பர அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் கால்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு தடுக்கிறது. இவ்வகை கால்கள் மற்றும் மெசேஜ்கள் பெரும்பாலும் பணம் திருடும் நபர்கள் மற்றும் மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து வருகிறது.
ட்ராயின் ஆணையை ஒப்புக்கொண்ட நிறுவனங்கள்:
பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டுமே ஏஐ ஃபில்டர் சேவையை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |