Train Counter Ticket Cancel Online
பொதுவாக சிறு வயதில் இருந்தே நமக்கு ரயிலில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்னும் சொல்லபோனால் சிறுவயதில் இரயிலை பார்ப்பதற்கே அவ்வளவு ஆசையாக இருக்கும். நாம் அனைவருமே இரயிலில் பயணம் செய்திருப்போம். இன்றும் பலரும் பேருந்தில் பயணம் செய்வதை விட ரயிலில் தான் அதிகமாக பயணம் செய்கிறார்கள். அப்படி இரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லப்போகிறேன். அது என்ன குட் நியூஸ் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுதாக படிக்கவும்.
நீங்க ஆதார் கார்டு எப்போ எடுத்தீங்கனு தெரியுமா அதை உடனே Update செய்ய வேண்டுமாம் |
ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்:
பொதுவாக நாம் அனைவருமே இன்றைய நிலையில் ரயில் டிக்கெட் புக் செய்வதை ஆன்லைனிலேயே செய்து கொள்கின்றோம். அப்படி ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட் புக்கிங் செய்யும் போது ஏதோ ஒரு காரணத்திற்காக ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும் போது நாம் என்ன செய்வது.
உடனே ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் கவுண்டரில் டிக்கெட்டை ரத்து செய்வோம். ஆனால் இனி அப்படி செய்யவேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய இனி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டை Cancel செய்யும் வசதியை இந்தியன் ரயில்வே வழங்குகிறது.இதுவரை வந்த அப்டேட்டை விட இது நல்லா இருக்கே |
அதுபோல அதில் விதிமுறைகளை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. அதை பற்றி இங்கு காண்போம்.
- நீங்கள் ரயில் டிக்கெட் வாங்கும் போது டிக்கெட் கவுண்டரில் ஒரு Form கொடுப்பார்கள். அதில் உங்களுடைய போன் நம்பரை கொடுத்திருந்தால் மட்டுமே நீங்கள் ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் Cancel செய்ய முடியும்.
- அதுபோல நீங்கள் எடுக்கும் டிக்கெட் Conform டிக்கெட்டாக இருந்தால் அதை ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் ட்ரெயின் டிக்கெட்டை ஆன்லைனில் Cancel செய்ய வேண்டும்.
- அதுவே உங்கள் டிக்கெட் Waiting List இல் இருந்தால் அதை ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடத்திற்கு முன் Cancel செய்து கொள்ளலாம்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |