திருச்சியில் மெட்ரோ ரயில்
ரயிலில் பயன்பாய்த்து என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. காரணம் வேகமாக செல்லும் மற்றொன்று தொகை குறைவாக இருக்கும், உடல் வலி தெரியாது என்ற காரணத்தினால் ரயிலில் செல்வதற்கு ஆசைப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் திருச்சிக்கு மெட்ரோ ரயில் வருகிறதாம். இது குறித்த தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..! இந்த மாஸான நியூஸை தெரிஞ்சிக்கலனா எப்படி..
திருச்சியில் மெட்ரோ ரயில்:
திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கான விரிவான பொது போக்குவரத்து திட்டம் குறித்த ஆய்வறிக்கை மாமன்றம் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இது குறித்து அந்நிறுவனத்தை சேர்ந்த அழகப்பன் திருச்சி மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விளக்கத்தை கூறினார்.
அதில், “அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒரு நகரத்துக்கு பொதுப் போக்குவரத்து எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திருச்சி மாநகரில் ஓராண்டு காலம் 803.75 சதுர கிலோ மீட்டரில் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆய்வு நடத்தப்பட்டது.
சமயபுரம் முதல் ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் நிலையம், முல்லைநகர், வயலூர் வரை 18.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும், துவாக்குடி முதல் திருவெறும்பூர், பால்பண்ணை, பஞ்சப்பூர் வழியாக மத்திய பஸ் நிலையம் வரை 26 கிலோ மீட்டருக்கு ஒரு வழித்தடமும், ஜங்ஷன் முதல் விமானநிலையம், புதுக்கோட்டை ரோடு, சுற்றுச்சாலை வரை 23.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும் என 3 வழித்தடங்களில் மொத்தம் 68 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை நிறைவேற்றச் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
சரமாரியாக குறைந்த கேஸ் சிலிண்டரின் விலை.. இன்னமும் உங்களுக்கு இந்த நியூஸ் தெரியாம இருக்கா..
மேலும் பாதசாரிகளின் பாதுகாப்பான நடைபாதைக்கு 66 கி.மீ தொலைவுக்கு நடைபாதை, ஜங்சன் உள்ளிட்ட 9 இடங்களில் நடை மேம்பாலம், சப்வே அமைக்க வேண்டும். சரக்கு போக்குவரத்தை கையாள பிராட்டியூர், துவாக்குடி, குமாரமங்கலம், காந்தி மார்க்கெட் ஆகிய 4 இடங்களில் சிறப்பு வளாகம் அமைக்க வேண்டும். நகர் பகுதியில் 7 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க வேண்டும். போன்றவற்றை தெரிவித்தார்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |