மே மாதம் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கான டிக்கெட்கள் 2025

Advertisement

TTD May 2025 Tickets Release Date In Tamil

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பார்கள். ஏழுமலையானை தரிசித்து வந்தால் நமக்கு இருக்கும்  பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் புதிய மாற்றம் வரும் என்பது ஐதீகம். உங்கள் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் நீங்கி பாசிட்டிவ் ஆக இருப்பீர்கள். அதனாலேயே மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு பிரச்சனை என்றால் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டு விட்டு வருவார்கள்.

திருப்பதி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று நம் அனைவருக்கும் தெரியும். திருப்பதியில் ஏப்ரல் மாதம் கடைசி வரை தரிசனம் செய்வதற்கான அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. அந்த வகையில் மே மாதத்திற்கான தரிசன ஆன்லைன் டிக்கெட்கள் இன்று வெளியிடப்பட்டன. தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்கள் முழுவிவரத்தையும் பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

Tirumala Darshan 300 Ticket Online Booking in Tamil

மே மாதம் ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டன:

மே மாதம் சுப்ரபாத தரிசனம், தோமாலா, அர்ச்சனை மற்றும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவைகளுக்கான லக்கி டிப் டிக்கெட்கள்  பிப்ரவரி 18ம் தேதி காலை 10 மணிக்கு  வெளியிடப்பட்டன. லக்கி டிப் ஆன்லைன் முன்பதிவு  பிப்ரவரி 20 ம் தேதி காலை 10 மணி  வரை நடைபெறும். லக்கி டிப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் பிப்ரவரி 22ம் தேதி பகல் 12 மணிக்கு வெளியிடப்படும்.

மே மாதம் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்டவற்றிற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்கள்  பிப்ரவரி 21ம் தேதி காலை 10 மணிக்கு  வெளியிடப்படும். ஆர்ஜித சேவைகளுக்கான விர்சுவல் சேவை டிக்கெட்கள்  பிப்ரவரி 21ம் தேதி பகல் 3 மணிக்கு  வெளியிடப்படும்.  பிப்ரவரி 22ம் தேதி காலை 10 மணிக்கு  அங்கபிரதட்சணம் டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன.

 பிப்ரவரி 22ம் தேதி காலை 11 மணிக்கு  ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட்களும், அன்று  பகல் 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்று திறன் கொண்ட பக்தர்கள், நாள்பட்ட நோய் உடையவர்களுக்கான தரிசன கோட்டா டிக்கெட்களும் வெளியிடப்பட உள்ளன.

 பிப்ரவரி 24ம் தேதி காலை 10 மணிக்கு  ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன. அன்று  பகல் 3 மணிக்கு  மே மாதம் திருப்பதி மற்றும் திருமலையில் தங்குவதற்கான தங்கும் அறைகளுக்கான முன்பதிவு வெளியிடப்பட உள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தரிசன டிக்கெட் முன்பதிவுகள் அனைத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.

அதிகாரபூர்வ இணையதளம் 👉 ttd ticket booking 

மே மாதம் என்றாலே அனைத்து ஊர்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும், ஏனென்றால் மே மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்கள் என்பதால் மக்கள் சுற்றுலா இடங்களுக்கும் கோவில்களுக்கும் குடும்பத்தோடு சென்று கோடை கால விடுமுறையை கழிப்பார்கள்.

இந்த ஆண்டு கோடை கால விடுமுறையில் திருப்பதி செல்ல வேண்டும் என்று என்னும் குடும்பத்தினர்கள் இன்றே உங்களுக்கான தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசித்து வாருங்கள்.

How To Book Tirumala Darshan Tickets Easily

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement