நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது 2022?
Ullatchi Therthal 2022:- வணக்கம் நண்பர்களே.. இந்த 2022-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற உள்ளது என்பதை குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த 26ஆம் தேதி ஜனவரி 2022 அன்று அறிவித்திருக்கிறது.. அதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உள்ளாட்சி தேர்தல் எப்போது 2022?
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 | Nagarpura Ullatchi Election 2022 | |
வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்ப நாள் | ஜனவரி 28, 2022 |
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் | பிப்ரவரி 04, 2022 |
வேட்புமனு ஆய்வு செய்யப்படும் நாள் | பிப்ரவரி 05, 2022 |
வேட்புமனு திரும்பப் பெரும் நாள் | பிப்ரவரி 07, 2022 |
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் | பிப்ரவரி 19, 2022 |
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் | பிப்ரவரி 22, 2022 |
வேட்புமனு தாக்கல் செய்வது எப்படி? |
தமிழத்தில் 2016-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் பலவிதமான காரங்களினால் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின்படி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டது. இருப்பினும் அப்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுகா ஆட்சி வந்த பிறகு விருப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தலை நடத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி கண்டா ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டமாக விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது எப்போது என்பதை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது போன்ற பலவிதமான பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | பொதுநலம்.com |