RD-க்கு அதிக வட்டி எங்கே கிடைக்கும்? | Unity Bank Recurring Fixed Deposit Interest Rate
வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. பேங்கில் நாம் Fixed Deposit செய்வது போல். RD-யிலும் டெபாசிட் செய்ய முடியும். Fixed Deposit என்பது வேறு ஒன்றும் இல்லை ஒரு பெரிய தொகையை ஒரு முறை மட்டும் முதலீடு செய்து அதன் முதிர்வு காலம் முடிந்த பிறகு அந்த முதலீட்டு தொகையும் மற்றும் அந்த முதலீட்டு தொகைக்கான வட்டியையும் சேர்த்து பெறுவது ஆகும். Recurring Deposit என்பது மாதம் மாதம் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது வருவது ஆகும். இதனையும் நாம் 5 வருடம் முதலீடு செய்து. அதற்கான வட்டியும் பெறலாம். எதற்கு இதை பற்றி சொல்றன்னா.. இன்றைக்கு Recurring Deposit-க்கு போஸ்ட் ஆபீஸை விட அதிக வட்டி தரும் இரு வங்கியை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க எந்த வட்டில் Recurring Deposit-க்கு அதிக வட்டி தருகிறது என்பதை பற்றி அறியலாம்.
Unity Bank Recurring Deposit, Fixed Deposit Interest Rate Hike 2023:
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி பேங்க்) டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதாவது மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) 1001 நாட்களுக்கு முதலீடு செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு 9.50% வட்டி வழங்குகிறது. அதேசமயம் மற்ற முதலீட்டாளர்களுக்கு (General Investors) 9.00% வட்டி வழங்கப்படுகிறது.
சேமிப்புக் கணக்குகளில், யூனிட்டி வங்கி ரூ.1 லட்சத்துக்கும் மேலான டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7% வட்டியும், ரூ. 1 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 6% வட்டியும் வழங்குகிறது.
யூனிட்டி வங்கி நிலையான வைப்பு/ தொடர் வைப்பு வட்டி விகிதங்கள் 2023 | Unity Bank Fixed Deposit/ Recurring Deposit Interest Rates 2023
காலம் | பொதுமக்கள் வட்டி | மூத்த குடிமக்கள் வட்டி |
7-14 நாட்களுக்கு | 4.50% | 4.50% |
15-45 நாட்களுக்கு | 4.75% | 4.75% |
46-60 நாட்களுக்கு | 5.25% | 5.75% |
61-90 நாட்களுக்கு | 5.50% | 6.00% |
91-164 நாட்களுக்கு | 5.75% | 6.25% |
165-180 நாட்களுக்கு | 5.75% | 6.25% |
181-201 நாட்களுக்கு | 8.75% | 9.25% |
202–364 நாட்களுக்கு | 6.75% | 7.25% |
365 நாட்களுக்கு | 7.35% | 7.85% |
1 Year 1 day | 7.35% | 7.85% |
>1Year 1 day – 500 days | 7.35% | 7.85% |
501 Days | 8.75% | 9.25% |
502 Days – 18 M | 7.35% | 7.85% |
>18 M -1000 Days | 7.40% | 7.90% |
1001 Days | 9.00% | 9.50% |
1002 Days -3 Year | 7.65% | 8.15% |
>3 Year – 5 Year | 7.65% | 8.15% |
>5 Year – 10 Year | 7.00% | 7.50% |
யூனிட்டி வங்கியின் திருத்தப்பட்ட டெபாசிட் வட்டி விகிதங்கள் பிப்ரவரி 16, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
விண்ணப்பிக்கும் முன் யூனிட்டி வங்கியின் டெபாசிட் திட்டங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும். மேலும், முன்கூட்டியே திரும்பப் பெறும் டெபாசிட்டுக்கு ஒரு சதவீதம் வட்டி கழிக்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நிர்மலா சீதாராமன் மென்மேலும் மகிழ்ச்சியை அளித்து வருகிறார்.! பெண்களுக்கான சிறந்த திட்டம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |