Upcoming Cyclone in Tamilnadu 2023
வெயில் காலத்தில் எவ்வளவு வெயில் அடிக்க போகிறது, எவ்வளவு டிகிரி வெயில் அடித்திருக்கிறது என்று கவனிக்க மாட்டார்கள். அதுவே மழைக்காலம் வந்து விட்டால் தினமும் செய்திகளையும், செய்தி தாள்களையும் புரட்டின வண்ணமாக தான் இருப்பார்கள். ஏனென்றால் வெயில் எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்ளலாம். ஆனால் ஒரு நாள் மழை பெய்தாலும் நம்மால் அன்றாட வேலைகளை பார்க்க முடியாது. அதனால் தினமும் செய்திகளை பார்த்த வண்ணம் இருப்பார்கள். அந்த வகையில் புதிதாக ஒரு புயல் உருவாகியுள்ளதாம். அதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
புயல் பெயர் என்ன.?
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 11 மாவட்டங்களில் டிசம்பர் 1 -ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் இடம் பெயர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-11-2023 வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 02-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மைச்சாங் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
எங்கெங்கு மழை பெய்ய கூடும்:
டிசம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும். வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும்.
வியாழக்கிழமை இன்றய சென்னையில் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 4-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் இராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனா மழையும், புதுசேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்ய கூடும்.
கூகுள் மேப்பின் புதிய அம்சம் பாத்தா சும்மா அசந்து போயிடுவீங்க..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |