இனி ATM-ல் பணம் எடுக்க card தேவையில்லை Phone மட்டும் போதும்….

Advertisement

UPI ATM Easy Money Withdraw 

நம் முன்னோர்கள் காலத்தில் வெளியில் செல்ல வேண்டுமென்றால் பணம் அல்லது பர்ஸை எடுத்து செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கையில் பணம் இல்லாவிட்டாலும் மொபைல் மற்றும் மொபைலில் UPI இருந்தால் போதுமானது. எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். இந்த UPI ஆனது சிறிய பெட்டி கடை முதல் ஹோட்டல் வரை அனைத்திலும் இருக்கிறது. அவசர தேவைக்கு உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது ஆனால் உங்களிடம் ATM கார்டும் இல்லை பர்ஸையும் இல்லை கவலை வேண்டாம். உங்கள் மொபைல் போனில் UPI பயன்படுத்தும் வசதி இருந்தால் போதும் நீங்கள் ATMயில் பணம் எடுக்கலாம். அது எப்படி card இல்லாமல் பணம் எடுப்பது என்று யோசிக்கின்றிர்களா! ஆம் இப்போது  இந்தியாவில் UPI ATM வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ATM Card இல்லாமல் பணம் எடுக்கலாம். வாங்க UPI ATM யில் பணம் எடுப்பது என்று தெரிந்துகொள்வோம்.

UPI ATM யில் பணம் எடுப்பதற்கான வழிமுறைகள்:

upi atm cash withdrawal procedure in tamil

Step 1:- உங்கள் ATM திரையில் தெரியும் UPI CARDLESS CASH என்ற பட்டனை தேர்வு செய்யுங்கள்..

Step 2:- இப்போது உங்களுக்கு நீங்கள் எடுக்க வேண்டிய தொகையை தேர்வு செய்வதற்கான திரை தெரியும் அதில் நீங்கள் எடுக்க இருக்கும் தொகையினை தேர்வு செய்யவும்.

உங்கள் தொகையினை தேர்வு செய்ததும் QR Code உங்களுக்கு திரையில் தெரியும்.

Step 3:- அந்த QR Code-டை நீங்கள் பயன்படுத்தும் UPI App மூலம் Scan செய்ய வேண்டும்.

உங்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் நீங்கள் தேர்வு செய்த தொகை UPI ATM வாயிலாக உங்களை வந்தடையும்.

upi atm cash withdrawal procedure in tamil

 

இந்த புதிய சேவையை National Payments Corporation of India(NPCI) மற்றும் NCR Corporation Ltd இணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த சேவையினை மும்பையில் செப்டம்பர் 5 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த UPI ATMயில் பணம் எடுப்பது மிக எளிதான இருப்பதால் வரும் காலங்களில் cardless பண வர்த்தகத்திற்கு ஒரு முன்னோடியாக இருக்கும்.

போன்பே -யில் பின் நம்பரை மறந்து விட்டீர்களா.! அப்போ இதை பண்ணுங்க..

மொபைலில் இருந்து Phonepe Account-ஐ நிரந்தரமாக நீக்குவது எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement