Google Pay, Phonepe Paytm போன்ற UPI சேவை கட்டணம் வசூலிக்க திட்டம் – மத்திய நிதி அமைச்சகம் பதில்

Advertisement

மத்திய அரசு விளக்கம்

நண்பர்களே வணக்கம் அனைவரும் கணினி உலகத்திற்கு மாறி வந்துகொண்டு இருக்கிறோம். அந்த வகையில் அதிகளவு பண பரிவர்த்தனை அனைத்தும் டிஜிட்டல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு கடைகளுக்கு சென்றாலும் அங்கு வாங்கும் பொருட்களுக்கும் online மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்கி வருகிறோம்.

ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களுக்கு Google Pay, Phone Pay என நிறைய இணையதல வசதிகள் மூலம் பணத்தை செலுத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்த போது அது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பற்றி முழு பதிவை இப்போது தெரிந்துகொள்வோம் வாங்க..!

மத்திய அரசு விளக்கம்:

இந்த நிலையில் மத்திய அமைச்சகம் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை அதற்கான திட்டம் அரசுக்கு இல்லை எனவும் மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் யுபிஐ டிஜிட்டல் சேவை என்பது பொதுமக்களிடம் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த சேவையானது பொதுமக்களும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான தூண்டுகோலாக இருந்துவருகிறது. எனவே பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மத்திய  அரசானது பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பங்காக கடந்த 2016 அம ஆண்டு ஏப்ரல் மாதம் யுபிஐ சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் நிறைய பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் வாயிலாக கட்டணம் இல்லாமல் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பரிவர்த்தனைகளானது டீ கடையில் தொடங்கி தங்கம் வாங்கும் கடைகள் வரை செயல்பட்டு வருகிறது. இதற்கான ஸ்மார்ட் போனுக்கு மாறிவருகிறார்கள் மக்கள்கள்.

இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை ரூபாய் 600 கோடி மதிப்பில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதையும் தெரிந்துகொள்ளவும் ⇒ திடீரென்று ATM மையங்களில் பரிவர்த்தனை கட்டணம் கூடுதல் உயர்வு

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement