வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு..! இனி UPI மூலம் இவ்வளவு தான் பணம் அனுப்ப முடியும்..!

UPI Daily Limit Set All Banks in Tamil

UPI Daily Limit Set All Banks in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..? என்னன்னு கேட்கிறீங்களா..? அது என்ன விஷயம் என்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்களிடம் UPI மூலம் பணம் அனுப்பும் வசதி இருக்கிறதா..? அப்படி என்றால் நீங்கள் தான் இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது பொதுவாக நாம் வாழும் இந்த உலகம் டிஜிட்டல் உலகமாக மாறிவிட்டது. எந்த மனிதரை பார்த்தாலும் ஸ்மார்ட் போன் தான். ஸ்மார்ட் போன் வந்த பின் நம்முடைய பல வேலைகள் சுலபமானதாக மாறிவிட்டது. அதாவது நாம் கடைக்கு சென்று ஏதாவது பொருள் வாங்கினாலும் அதற்கான பணத்தை ஆன்லைன் மூலம் தான் அனுப்புகிறோம். அதற்கு தான் வங்கிகள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அது என்ன முடிவு என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉https://bit.ly/3Bfc0Gl

இனி UPI மூலம் எவ்வளவு பணம் முடியும் தெரியுமா..?

upi daily limit set பொதுவாக நம்மில் பலரும் UPI மூலம் தான் பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றோம். இதனால் பெட்டிகள் முதல் பூக்கடைகள் வரை அனைத்திலும் UPI மூலம் பணம் அனுப்பும் வசதி வந்துவிட்டது.

இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டின் தகவலின் படி இந்தியாவில் UPI மற்றும் கார்டு பேமெண்ட் மூலம் சுமார் 149.5 லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இனி ATM -ல் இப்படி கூட பணம் எடுக்கலாமா.. இது இன்னும் சூப்பரா இருக்கே.. 

இதனால் சில வங்கிகள் இப்போது, ​​HT Tech அறிக்கையின்படி, HDFC, State Bank of India மற்றும் ICICI போன்ற வங்கிகள் UPI பரிவர்த்தனைகளுக்கு இவ்வளவு தான் வரம்பு என்று நிர்ணயம் செய்துள்ளது. 

இதற்கு காரணம் QR கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதால் பல மோசடிகள் நடந்து வருகிறது. எனவே இதனை தடுப்பதற்காக நாட்டின் முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஒரு நாளுக்கு குறிப்பிட்ட தொகை வரையில் மட்டுமே UPI மூலம் செலுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

NPCI விதிமுறைப்படி, ஒரு நாளுக்கு ஒருவர் அதிகப்படியாக 1 லட்ச ரூபாய் வரையிலான தொகையை UPI மூலம் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் இந்த அளவீடு ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது. அதை இங்கு விரிவாக காணலாம்.

Google எடுத்த அதிரடி முடிவு.. டிஜிட்டல் லோன் ஆப்களுக்கு செக் வைத்தது ஏன்

ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு மாறுபடுகிறது..?

  • Canara வங்கி – 25000 ரூபாய்
  • SBI 1 லட்சம் ரூபாய்
  • HDFC வங்கி – 1 லட்சம் ரூபாய். HDFC வங்கியில் சில வாடிக்கையாளர்களுக்கு 5000 ரூபாய் லிமிட் செட் செய்யப்பட்டு உள்ளது.
  • ICICI வங்கி – 1 லட்சம் ரூபாய்
  • Axis Bank – 1 லட்சம் ரூபாய்
  • Bank of Baroda25000 ரூபாய்

அதுபோல விதிமுறைகளின் படி 24 மணிநேரத்திற்கு அதிகப்படியாக UPI மூலம் 20 முறை மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும் என்று கூறியுள்ளது.

உங்களின் வாட்ஸப்பிற்கு ஆபத்து.. இதை மட்டும் செய்யாதீர்கள்

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil