இனி ரேஷன் கடைகளிலும் UPI வசதி தமிழக அரசு அதிரடி! – UPI Money Transaction in Ration Stores Tamil
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடையிலும் UPI பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்களும் விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அது குறித்த தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
நியாயவிலை கடைகளில் இனி பணத்திற்கு பதில் UPI வசதி! தமிழக அரசு அறிவிப்பு!
டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்யும் நடைமுறை அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார் முதல்கட்டமாக பெரிய நகரங்களில் உள்ள ரேசன் கடைகளில் இந்த வசதி செய்யப்படும் என்றும் பின்னர் படிப்படியாக அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News |