யுபிஐ பணப் பரிவர்த்தனையில் புதிய விதிமுறைகள்
ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் யுபிஐ பயன்படுத்துகிறார்கள். மேலும் சிறிய கடை முதல் பெரிய கடை வரை யுபிஐ பயன்பாடு அதிகமாக இருக்கிறது. காரணம் வெளியில் செல்லும் போதெல்லாம் பணத்தை எடுத்து சென்று அதனை பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும் என்ற பயம் இருக்காது.
ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டும் போதும் எவ்வளவு பெரிய தொகையும் பாதுகாப்பாக இருக்கும். மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக பயன்படுத்தப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கட்டண முறையாக மாறியுள்ளது. இதில் புதிய விதிகளை அறிவித்துள்ளது அதனை பற்றி அறிந்து கொள்வோம்.
UPI Payment New Rules 2024:
அனைவரது கையிலும் மொபைல் போன்கள் உள்ளது. இதனால், ஆன்லைன் பேமெண்ட் மூலம் தங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் எளிதாக முடிந்து விடுகிறது. சாதராண பெட்டி கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அனுமதிக்கப்படுகிறது. 1 ரூபாய் பொருட்கள் கூட இதன் மூலம் எளிதாக வாங்க முடிகிறது.
எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam |
⇒ ஒரு ஆண்டாக செயல்படாமல் இருக்கும் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்ய கூகுள் பே, Paytm செயலிகளுக்கு என்பிசிஐ அறிவுறுத்தல்.
⇒ ஒரு பயனர் அவர்கள் இதுவரை பரிவர்த்தனை செய்யாத மற்றொரு பயனருக்கு, (அதாவது) இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்றால் 2000 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் முதல் பணபரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவை பணமோசடிகளை தடுப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது.
⇒ இதுவரை யுபிஐ பரிவர்த்தனையில் 1 லட்சம் அதிகபட்ச தொகையாக இருந்தது, தற்போது மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணபரிவர்த்தனையின் உச்சர்வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
⇒ யுபிஐ-யில் புதிதாக டேப் அண்ட் பே என்ற புதிய அம்சம் விரைவில் வழங்கப்படும்.
⇒ நாடு முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு. இதன்மூலம் QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம். ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் ₹ 2,000- க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |