UPI பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்கு NPCI புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Advertisement

UPI-க்கான NPCI புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 

பெரும்பாலும் நாம் வாழும் இந்த உலகம் டிஜிட்டல் உலகமாக மாறிவிட்டது. இன்றைய நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஸ்மார்ட் போன் வந்த பின் அனைவரின் வேலையும் சுலபமானதாக மாறிவிட்டது. UPI  பயன்படுத்த  நபரே இப்போ இல்லனு தான் சொல்லணும். வீட்டில் ஒருத்தவங்க கண்டிப்பா UPI பயன்படுத்தும் நபர இருக்காங்க. அப்படி UPI மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்..! அப்போ உங்களுக்கான ஒரு நியூஸ் தான் இது. அது என்ன  நியூஸ், குட் நியூசா பேட் நியூசா அப்படி கேட்டா அது இரண்டுமே தாங்க. முன்பெல்லாம், வங்கிக்கு சென்று தான் மற்றவருக்கு பணத்தை அனுப்புவோம். ஆனால் இப்பொழுது ஸ்மார்ட் போனின் UPI மூலம் இருந்த இடத்தில் இருந்தே பணபரிவர்தனைகளை செய்து வருகின்றோம். ஆனால் அவ்வாறு செய்யும் போது சில பிரச்சனைகளை சந்திக்கத்தான் வேண்டி இருக்கிறது. அதற்கு காரணமும் இணையம் தான். இந்த பிரச்சனைகளில் இருந்து மக்களை பாதுகாக்க NPCI UPI பயன்படுத்துவோருக்கு சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதை கடைபிடிக்கவில்லை என்றால் டிசம்பர் 31 2023 உடன் உங்கள் UPI சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இன்றைய பதிவில் NPCI வழங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

UPI-க்கான NPCI புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:

upi npci circular in tanil

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), நவம்பர் 16, 2023 அன்று, UPI பரிவர்த்தனைகள் 11 பில்லியனைத் தாண்டியதாக இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிவிப்புடன் இணைந்து, NPCI நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் வழியாக வங்கிக் கணக்குகளுக்கு இடையே விரைவான மற்றும் வசதியான பணப் பரிமாற்றங்களைச் செய்யும் புரட்சிகர தளமான UPI நிகழ்கிறது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் வெறும் இரண்டே மாதங்களில் நடைபெற்றுள்ளது. இப்படி வளந்துவரும் தளத்திற்கான நெறிமுறைகளை மேம்படுத்துவது சிறந்தது. அந்தவகையில் NPCI புதிய’நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை:

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய எண்ணை வங்கியில் இருந்து நீக்காமல் புதிய மொபைல் எண்ணை பயன்படுத்துவது பரிவர்த்தனைகள் இடையை குழப்பங்களை உருவாக்கும்.

அதனால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, செயலிழக்கப்பட்ட பழைய எண்களை 90 நாட்களுக்கு பின் புதிய சந்தாதாரருக்கு வழங்கலாம்.

NPCI உத்தரவின் படி, அனைத்து வங்கிகளும் செயலற்ற UPI ஐடிகளை செயலிழக்கச் செய்ய வேண்டும். ஒரு வருடம் வரை செயல்படாத கணக்குகளை கவனித்து அவற்றை முடக்கப்படும். கூடுதலாக, இந்த கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் UPI அமைப்பிலிருந்து அகற்றப்படும்.

அப்படி நீக்கப்படும் பட்சத்தில், மீண்டும் வாடிக்கையாளர்கள் தங்களை UPI பரிவார்த்தையை தொடங்க மீண்டும் UPI App களில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவுக்கு பின் பயனர்கள் வழக்கம் போல் தங்கள் UPI பின்னைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

தொடர்புகள் அல்லது மொபைல் எண்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கும் முன், UPI பயன்பாடுகள் கோரிக்கையாளர் சரிபார்ப்பை (ReqValAd) செய்யும்.

பரிவர்த்தனையின் போது காட்டப்படும் பெயர் துல்லியமான வாடிக்கையாளரின் பெயராக இருப்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது, மேலும் தவறான நிதி பரிமாற்றத்தைத் தடுக்கும்.

இவ்வாறு NPCI, UPI வாடிக்கையாளர்களுக்கு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

UPI பின் செட் பண்ணனுமா..? அப்படினா இந்த ஈஸி வழிய தெரிஞ்சுக்கோங்க..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement