Gpay, PhonePe மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்..! இனி அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விஷயம் தெரியுமா உங்களுக்கு..!

Advertisement

UPI Payment Charges From 1 April

ஹலோ நண்பர்களே..! நீங்களும் UPI மூலம் பணம் அனுப்புகிறீர்களா..! அப்போ நீங்கள் இந்த செய்தியை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி..? உங்களுக்காக தான் இந்த செய்தியை கொண்டு வந்திருக்கிறேன். அது என்ன செய்தியாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இனிமேல் UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படுமாம். இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பான், ஆதார் வைத்திருப்பவர்கள் இதை முக்கியம் தெரிந்துகொள்ளுங்கள்

இனி UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணமா..?  

இனி UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணமா

நண்பர்களே வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுவாக இன்றைய நிலையில் நாம் அனைவருமே ஒரு பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்கினாலும் அதற்கு பணத்தை UPI மூலம் தான் அனுப்புகிறோம். அதுபோல சிறிய பெட்டிக்கடையில் முதல் தள்ளுவண்டி கடைகள் வரை UPI மூலம் பணம் அனுப்பும் வசதி இருக்கிறது.

அதனால் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) முடிவு செய்துள்ளது.

ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

 உங்கள் போனில் UPI மூலம் வியாபாரிகளுக்கு நீங்கள் பணம் அனுப்பினால் 1.1 % வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தேசிய பரிவர்த்தனை கழகம் கூறுகிறது. அதுபோல நீங்கள் UPI மூலம் 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படும். 

அதாவது இப்பொழுது ஒரு கடையில் நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு 2000 ரூபாய்க்கு மேல் UPI மூலம் பணம் அனுப்பினால், அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும்.

அதுவே 2000 ரூபாய்க்கு குறைவாக UPI மூலம் பணம் அனுப்பினால் அதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஒரு நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படாது. அதுவே ஒரு நபர் வியாபாரிகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.

ஆதார் கார்டு வைத்து இருந்தால் மட்டும் போதாது அதுல இப்படி ஒரு விஷயம் இருக்குறதும் தெரியனும்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement