UPI Payment Charges News in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. வருகின்ற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் UPI பரிவர்த்தனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற விளக்கத்தை தேசிய பரிவர்த்தனை வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு நடைபெறும் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
Gpay, Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. யார் யார்-லாம் கட்டணம் செலுத்த வேண்டும்
டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வோரின் பிரதான தீர்வாக உள்ளது UPI என்பதும் ஒருங்கிணைத்த பரிவர்த்தனை தரவு. இந்த நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு அதிகமான UPI பரிவர்த்தனைக்கு 1.1 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சாதரண மக்கள் கூட பாதிக்கப்படுவார்கள் என்று அச்சம் எழுந்தது இந்த நிலையில் தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் UPI பரிவர்த்தனை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி UPI கட்டணம் வணிக பயன்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
JIO SIM வாடிக்கையாளர்களா நீங்கள்..? அப்படி என்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!
அதாவது ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு அதற்கான தொகையை பேட்டியம், போன்பே, ஜிபே, Free charge போன்ற செயலிகளில் செலுத்தும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த தேவை இல்லை.
அதேபோல தனி நபர் ஒருவர் வங்கியில் இருந்து மற்றொருவரது வங்கி கணக்கிற்கு UPI வழியே பணம் அனுப்பினாலும் புதிய கட்டணம் எதுவும் இல்லை. இந்த சேவைகளை வழக்கம் போல இலவசமாக பெறலாம்.
ஆனால் பேட்டியம், போன்பே, ஜிபே, Free charge போன்ற செயலிகளில் Wallet-களில் நேரடியாக UPI வழியே பணம் நிரப்பும்போது மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதுவும் 2000-க்கும் மேல் Wallet-களில் பணம் நிரப்புபவர்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த கட்டணம் விகிதம் வணிகத்தை பொறுத்து புள்ளி 0.5% முதல் 1% வரை மாறுபடும். ஆகவே புதிய கட்டணங்களால் தற்போது UPI பரிவர்தனைகளின் மேற்கொள்ளும் 99% பேருக்கு பாதிப்பு வாராது என்பதை தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |