கூகுள் பே, போன் பே பயன்படுத்தினால் கட்டணம் வசூல்.!

Upi Transaction Gst in tamil

Google Pay Phone Pay Paytm

ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் பணம் பரிவர்த்தனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் கூகுள் பே, போன் பே ஆப்கள் மூலம் பணம் செலுத்தினால் கட்டணம் என வங்கிகள் அறிவித்துள்ளது. 90 முறைக்கு மேல் கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் செலுத்த  வேண்டும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி  வருகிறது. அதை பற்றி தகவலை இந்த பதிவின்  மூலம் தெரிந்து கொள்வோம்.

Upi Transaction Gst:

ஒரு வங்கி கணக்கை கூகுள் பே, போன் பே மூலம் பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தும் ஆப்களில் 6 மாதங்களுக்கு ஒருவர் 90 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த புதிய மற்றும் எல்லாம் வங்கிகளும் செயல்படுத்தவில்லை. சில வங்கிகள் மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு துறை சார்ந்த கட்டண வசூல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

2023 பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய அரசு கொடுத்த ஒரு ஹாப்பி நியூஸ்

6 மாதத்திற்கு 90 முறை இலவசமாக UPI-யில் கட்டணம் செலுத்தலாம் அதற்கு மேல் அதாவது 91-வது முறை UPI மூலம் பணம் செலுத்த 2 ரூபாய் 25 காசு மற்றும் GST  வரி பிடிக்கப்படும். அதாவது, ஒவ்வொரு TRANSACTION-க்கும் 2.65 பிடிக்கப்படும்.

 ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை என 6 மாதங்களாக பிரித்து PAYTM, AMAZON PAY, PHONE PE, GOOGLE PAY போன்ற செயலிகளில் நீங்கள் பணம் செலுத்துவதை கணக்கிட்டு 6 மாதத்தில் 90 முறைக்கு மேல் UPI  மூலம் பணம் செலுத்தி 91 -வது முறையிலிருந்து கட்டணமாக 2.25 ரூபாயும் மற்றும் GST வரியும் சேர்த்து பிடிக்கப்படும் என் வங்கிகள் தெரிவித்துள்ளது. 

இது எல்லா வங்கிகளிலும் கிடையாது.. உங்கள் வங்கி இந்த துறை சார்ந்த கட்டண வசூல் வசூலிக்கிறார்களா என்பதை உறுதி செய்து நீங்கள் இந்த வரியை செலுத்த வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நிர்மலா சீதாராமன் மென்மேலும் மகிழ்ச்சியை அளித்து வருகிறார்.! பெண்களுக்கான சிறந்த திட்டம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil