UPI விதிகள் திடீர் மாற்றம்? அதில் ஒரு நாளுக்கு எவ்வளவு பணத்தை மற்றவர்களுக்கு மாற்ற விதிக்கலாம்

Advertisement

UPI விதிகள்

நண்பர்களே வணக்கம் புதிய செய்திகளுடன் நான்..! முன்பு இருந்த காலத்தில் இந்த பொருட்களுக்கு இந்த பொருள் தருகிறேன் என்ற அடிப்படையில் விற்பனை செய்தார்கள். அதன் பின் பணம் கொடுத்து பொருட்களை வாங்கி அவர்களின் தேவையை பூர்த்தி செய்துகொண்டார்கள். ஆனால் இப்போதோ கணினி உலகம் என்ன பொருட்கள் தேவை என்றாலும் போன் மூலம் பொருட்களை வாங்கி கொள்கிறார்கள். இதேபோல் நிறைய விஷயங்கள் மாறிவருகிற நிலையில் பணத்தை போன் மூலம் ட்ரான்ஸ்பர் செய்து பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதேபோல் தினம் தோறும் தொகையை மாற்றிவருகிறார்கள்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை:

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) வெளியிட்ட தகவலில்  கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் யுபிஐ என பிரபலமாக அறியப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் வாயிலாக ரூ. 657 கோடி டிரான்ஸாக்ஷன் வரை ட்ரான்ஸபெர் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மாதம் தோறும் யூபிஐ மூலம் பணம் ட்ரான்ஸபெர் செய்வதின் அளவானது வால்யூம் அடிப்படையில் 4.6 சதவீதமும், மதிப்பு அடிப்படையில் 1 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆகவே யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது ரிசர்வ் வங்கியின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மூலம் பணத்தை மாற்றக்கூடிய கட்டண அமைப்பானது உயர்ந்துள்ளது.

ஒருவர் யூபிஐ சேவை மூலம் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு நபரும் இரண்டு வங்கி கணக்குகளுக்கு இடையே எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும்  பணத்தை உடனடியாக ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ள முடியும்.

இதன் மூலம் பணத்தை விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸை பணத்தை ட்ரான்ஸபெர் செய்யவேண்டும். ஒரு போன் வைத்துக்கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை இணைத்து பணம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதனுடைய முழு விவரத்தையும் விரைவாக வங்கியில் வரவு வைக்கப்படும்.

போன் ஆப்ஸ் தவிர மற்ற ஆப்ஸ் அதாவது போன் பே, பேடியம் மற்றும் கூகுள் பே போன்ற பல்வேறு கட்டண ஆப்ஸைப் பயன்படுத்தலாம். மேலும் இதன் மூலம் தினசரி பண பரிவர்தனைகளின் வரவேற்பை அதிகப்படுத்தியுள்ளது..!

  1. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இதனுடைய வரம்பு ஒரு தவணையாக 1 லட்சம், தினம் தோறும்  1 லட்சம் வரை பணம் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
  2. ICICI பேங்க் ஒரே தவணையாக 10,000 ரூபாய், அதேபோல் கூகுள் பே பயன்படுத்துபவருக்கு 25,000 ரூபாய் வரம்பு.
  3. ANDHRA BANK: ஆந்திரா வங்கி இதற்கு ஒரே தவணையாக 1 லட்சம் வரம்பு,  தினசரி வரவு 1 லட்சம் ஆகும்.
  4. AXIS BANK: ஆக்சிஸ் வங்கி  ஒரே தவணை 1 லட்சம் வரம்பு, தினசரி வரவு 1 லட்சம் ஆகும்.
  5. CANARA BANK: கனரா வங்கி ஓரே தவணை – ரூ.10,000 வரை, தினசரி வரம்பு – ரூ.25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
  6. DENA BANK: தேனா வங்கி ஒரே  தவணை – ரூ.1 லட்சம் வரை, தினசரி வரம்பு – ரூ.1 லட்சம்.
  7. CITY BANK: சிட்டி வங்கி ஒரே தவணை – 1 லட்சம் ரூபாய்,  தினசரி வரம்பு – ரூ.1 லட்சம்.
  8. CITY UNION BANK: சிட்டி யூனியன் வங்கி ஒரே தவணை – ரூ.1 லட்சம் வரை அது மட்டுமில்லமால்,  தினசரி வரம்பு – ரூ.1 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யமுடியும்.
  9. BARODA BANK ஒரே தவணை – ரூ.25,000  தினசரி வரம்பு – ரூ.1 லட்சம் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
  10. BANK OF INDIA பாங்க் ஆஃப் இந்தியா ஒரே தவணை – ரூ.10,000, தினசரி வரம்பு – ரூ.1 லட்சம் வரை.
  11. CENTRAL BANK OF INDIA சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒரே தவணையாக  ரூ.25,000 ரூபாய் பணத்தை மாற்ற முடியும்.  தினசரி வரம்பு – ரூ.50,000 வரை வரவு வைக்கமுடியும்.
  12. BANK OF MAHARASHTRA மகாராஷ்டிரா வங்கி ஒரே தவணை – ரூ.1 லட்சம் வரை பணத்தை மாற்ற முடியும். அதே போல் தினசரி வரம்பு – ரூ.1 லட்சம் வரை வரவு வைக்க முடியும்.

ஒரு SMS அனுப்புனா? BANK உங்கள் கையில் இருக்கும்..! SMS பண்ணிட்டிங்களா

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 👍News
Advertisement