விடைத்தாள் திருத்தும்
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. தமிழ் மொழித் தாள், ஆங்கிலம், இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல், கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அது என்னென்ன கட்டுப்பாடுகள் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
மகளிருக்கு மட்டுமில்லாமல் மற்ற நபர்களுக்கும் இலவசம்..! அது யாருக்கு என்று தெரிந்துகொள்ளுங்கள்..!
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் போது ஆசிரியர்கள் செய்ய கூடாதவை:
பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. ஆகையால் விடைத்தாள் திருத்தும் மையத்தில் உள்ள ஆசிரியர்கள் போன் பேச கூடாது என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் போது செல் போன் பேசுவதை கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை என கூறியுள்ளது.
மேலும் விடைத்தாள்கள் திருத்தும் போது தேவையின்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். பணிக்கு நேரம் கடந்து வருவது, பணியில் இடையில் வெளியே செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் விடைத்தாள்களில் மதிப்பெண்களை கூடவோ அல்லது குறைவாகவோ வழங்க கூடாது, சரியான மதிப்பெண்களை மட்டும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பெண்களின் தவறு ஏதும் நேர்ந்தால் விடைத்தாள் திருத்தும் பணி மையத்திற்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் சென்னை மக்கள் யாரும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டாம் குட் நியூஸ் வந்தாச்சு
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |