உழவன் செயலியில் இனி அறுவடை இயந்திரங்கள் (ம) உரிமையாளர் விவரங்களை அறியலாம்..!

Advertisement

உழவன் செயலியில் இனி அறுவடை இயந்திரங்கள் (ம) உரிமையாளர் விவரங்களை அறியலாம்..!

Uzhavan app details in tamil – விவசாய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு குட் நியூஸ். அது என்ன குட் நியூஸ் என்று கேட்குறீர்கள். அது வேறு ஒன்று இல்லை உழவன் செயலியில் இனி அறுவடை இயந்திரங்கள் (ம) உரிமையாளர் விவரங்களை அறிய முடியும். இதனை தமிழ் நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ஏற்பாடு செய்துள்ளது. ஆக இனி விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த நேரத்தில் அறுவடை செய்யலாம். சரி வாங்க இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களை அறியலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்..!

உழவன் செயலி குறித்த அப்டேட் – Uzhavan app details in tamil:

தனியாருக்கு உரிய 4456 நெல் அறுவடை இயந்திரத்தின் உரிமையாளர்கள் பெயர், மொபைல் எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

பயன்கள் என்ன?

விவசாயிகள் தங்களது நெற்பயிரை குறித்த காலங்களில் அறுவடை செய்வதற்குப் போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் செய்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

விவசாயிகள் நெல் அறுவடை காலத்தில் அவர்கள் பகுதியில் உள்ள தனியார் அறுவடை இயந்திரங்களை நாடுகின்றன. அதன் காரணமாக அந்த இயந்திரங்களின் வாடகையும் அதிகரிப்பதோடு விவசாயிகள் அறுவடை இயந்திரங்களைப் பெறுவதற்காக இடைத்தரர்களை அணுக இருக்கிறது, மேலும் வாடகையோடு தரகர் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டி இருப்பதால் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. இவற்றை தவிர்த்திட உழவன் செயலியில் உரிமையாளர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின் மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியம் பெறும் திட்டம்..! எப்படி பெறலாம்..!

ஆக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள 4456 அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களின் விபரங்கள் அதாவது 3909 எண்கள் டயர் வகை அறுவடை இயந்திரங்கள் மற்றும் 547 எண்கள் செயின் வகை அறுவடை இயந்திரங்கல் விபரங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உழவன் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 17 எண்கள் டயர் வகை இயந்திரங்கள் மற்றும் 33 எண்கள் செயின் வகை அறுவடை இயந்திரங்கள் விபரங்கள் உட்பட வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம் அல்லது அருகாமை மாவட்டத்திலுள்ள அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறுவடை இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் மரு.கா.ப கார்த்திகேயன் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement