வானிலை அறிக்கை இன்று மழை வருமா?
கடந்த இரண்டு மாதங்களாக வெளுத்து வாங்கிய கோடை வெயிலுக்கு.. ஈடுகட்டும் வகையில் தற்பொழுது தமிழகத்தில் ஒரு வரமாக அங்கங்கே மழை பொலிந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இன்றைய வானிலை அறிக்கை செய்திகள்:
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில மணிநேரங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம்.
அதேபோல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழை கனமழை பெய வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும். சில இடங்களில் நீண்ட நேரம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 2023
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |