தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Advertisement

தமிழகத்தில் இன்றைய வானிலை அறிக்கை

வருடங்கள் தோறும் பருவநிலை மாற்றம் ஆனது நடந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் தற்போது இலையுதிர் காலம் மற்றும் கோடைகாலம் முடிந்து இப்போது மழைக்காலம் ஆரம்பம் ஆக இருக்கிறது. நாம் அனைவரும் வெயில் காலத்தினை கூட சமாளித்த விடாமல் ஆனால் மழைக்காலத்தினை எளிதில் சமாளிக்க முடியாது. ஏனென்றால் மழை அதிகமானால் வீடுகளில் தண்ணீர் புகுதல், வீடுகளை அடித்து செல்லுதல், நெற்பயிரை நாசம் செய்தல் மற்றும் பள்ளி, கல்லூரி வாழ்க்கையினை பாதித்தால் என இதுபோன்ற இடையூறுகள் தான் அதிகமாக காணப்படும். இதுபோன்ற நிலைகளை எல்லாம் எண்ணி மழைக்காலம் வந்து விட்டாலே எப்போது என்ன மாதிரியான நிகழ்வுகளை வானிலை அறிக்கை கூறும் என்ற பதட்டத்திலேயே அனைவரும் இருப்பார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் அதனை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க..!

Vaanilai Nilavaram Tamil Nadu Today:

தமிழகப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளைய தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துளளது.

அதுவும் குறிப்பாக 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று 09.10.2023 தேதி:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் கரூர், திண்டுக்கல், மதுரைதர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சிலர் இடங்களில் இன்று கனமழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நாளை 10.10.2023 தேதி:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரும் என்றும், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி, கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி என இத்தகைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் 11.10.2023 தேதி:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில்  ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரும்.

13.10.2023 to 15.10.2023 தேதி வரை:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன் அறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒருசில நகர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 வரை டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியசிற்கு ரீதியாக என்றும் கூறியுள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement