வைகாசி விசாகத்தை முன்னிட்டு நாளை திருநெல்வேலியிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்

Advertisement

Vaikasi Visakam Special Train in Tamil

பொதுவாக ஏதாவது விஷேச நாள் வந்தால் எல்லாரும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதாவது வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். அந்த நேரத்தில் பேருந்து, ட்ரெயின் எல்லாம் கூட்டமாக தான் இருக்கும். அவ்வப்போது அரசாங்கமானது மக்களின் வசதிக்காக  பேருந்துகள் மற்றும் ரயில்களை அதிகப்படுத்தும். அந்த வகையில் நாளை வைகாசி விசாகத்தை முன்னிட்டு நாளை சிறப்புரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே கூறியுள்ளது. இதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க.

திருநெல்வேலி to திருச்செந்தூர் சிறப்பு ரயில்:

திருநெல்வேலி to திருச்செந்தூர் சிறப்பு ரயில்

நாளை வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் முருகன் கோவிலுக்கு செல்வார்கள். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே ஆனது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனை பற்றி தகவலை கீழே பார்த்து அறிந்து கொள்வோம்.

நாளை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் முன்னிட்டு கோலாகலமாக இருக்கும்.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு மே 22-ம் தேதி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

மே 22-ம் தேதி காலை 6:40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06857) காலை 8:15 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது. அடுத்ததாக திருநெல்வேலியில் இருந்து வண்டி எண் 06859 காலை 11:25 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1:00 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது. வண்டி எண் 06858 என்ற சிறப்பு ரயிலானது காலை 9:15 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

மற்றொரு சிறப்பு ரயில் வண்டி எண் 06860 திருச்செந்தூரிலிருந்து மதியம் 1:30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகத் திருவிழாவிற்காக திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்காகச் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வண்டி என்ன  புறப்படும் நேரம்  சென்றடையும் நேரம் 
06857 காலை 6:40 AM காலை 8:15 AM
06859 காலை 11:25 AM மதியம் 1:00 PM
வண்டி எண்  திருச்செந்தூரிலுருந்து புறப்படும் நேரம்  திருநெல்வேலி வந்தடையும் நேரம் 
06858 காலை 9:15 AM காலை 10:50 AM
06860 மதியம் 1:30 PM பிற்பகல் 3:00 PM
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement