வேட்புமனு தாக்கல் செய்வது எப்படி?

vetpu manu thakkal in tamil

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வது எப்படி?

தமிழகத்தி வரும் பிப்ரவரி மாதம் 19-ம் நாள் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 28 தொடங்கி, பிப்ரவரி 04-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பிப்ரவரி 05-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அதன் பிறகு வேட்புமனுவைத் திரும்பப் பெற பிப்ரவரி 07ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது எப்படி? என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம் வாங்க.

வேட்புமனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்:

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் படிவம் 3 (வேட்புமனு படிவம்), படிவம் 3-A (உறுதி மொழி ஆவணம்), படிவம் 3-A யின் சுருக்கப் படிவம் மற்றும் வேட்பாளர் கையேடு (நகர்ப்புறம்) ஆகியவற்றை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

படிவம் 3 (வேட்புமனு படிவம்) என்பது முன்மொழிபவர், வேட்பாளர் விவரம், வேட்பாளரது உறுதிமொழி, வேட்பு மனுவினை பெற்றுக்கொண்டதுக்கான ஒப்புதலும், ஆய்வு குறித்த அறிவிப்பு. போன்ற விவரங்களை பூர்த்தி செய்யும் படிவமாகும்.

படிவம் 3-A (உறுதி மொழி ஆவணம்) என்பது தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக வேட்பாளர் வேட்பு மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டிய உறுதிமொழி ஆவணம் ஆகும்.

படிவம் 3-A யின் சுருக்கப் படிவம் என்பது வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது படிவம் 3 (வேட்பு மனு) மற்றும் படிவம் 3-A (உறுதிமொழி ஆவணம்) ஆகியவற்றுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டிய வேட்ப்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கமாகும். இந்த மூன்று ஆவணங்களையும் டவுன்லோடு செய்ய கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://tnsec.tn.nic.in/
1. வேட்புமனு
படிவம் 3 (வேட்புமனு படிவம்) DOWNLOAD HERE>>
படிவம் 3-A (உறுதி மொழி ஆவணம்) DOWNLOAD HERE>>
படிவம் 3-A யின் சுருக்கப் படிவம் DOWNLOAD HERE>>
2. வேட்பாளர் கையேடு (ஊரகம்) DOWNLOAD HERE>>

 

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

 

இது போன்ற பலவிதமான பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> பொதுநலம்.com