வாகன பிரியர்களே உஷார்..! ஏப்ரல் 1 முதல் உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!

Advertisement

வாகன பிரியர்களே உஷார்..! ஏப்ரல் 1 முதல் உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! What is new BS6 rule?

இவ்வுலகம் முழுவதும் மாசுவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. அதன்படி அடுத்த சில ஆண்டுகளின் மாசுவை கட்டுக்குள் கொண்டு வரத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்திய அரசு பாரத் ஸ்டேஜ் என்ற கட்டுப்பாடுகள் மூலம் மாசு ஏற்படுத்தும் இடங்களில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முயற்சி செய்கிறது. தற்போது இந்தியாவில் பிஎஸ் 6 என்ற மாசுக் கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. இந்த பிஎஸ் 6 கட்டுப்பாடு அமலுக்கு வருவதை ஒட்டி வாகனங்களின் விலையை 20 ஆயிரம் வரை உயர்த்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க..

What is new BS6 rule?

பெரு நகரங்களில் ஏற்படும் காற்று மாசு அளவை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பிஎஸ் 6 ரக வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிஎஸ் 6 ரக வாகன இன்ஜின்களில் காற்று மாசு அளவை கண்காணிக்கும் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதற்கேற்ப வாகனத்தின் Hardware, Software மற்றும் semiconductor-ஐ மாற்ற வேண்டும் என்பதால் வாகனத்தின் தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. இது வாகனத்தின் விலையிலும் எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதன்படி டாடா மோட்டார்ஸ், மாருதி, மகிந்திரா ஹோண்டா, எம்ஜி மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் வாகனங்களின் விலையை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

கார் போன்ற பயணிகள் வாகனத்திற்கு 2 முதல் 4 சதவீதம் வரை அதாவது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு வாகனங்களின் விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் மற்றும் கியா நிறுவனங்கள் விலை உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

மகிந்திரா நிறுவனம் 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தும் என அறிவித்துள்ளதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதை உடனே Update செய்ய வேண்டும்..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement