இல்லத்தரசிகளே உங்களுக்கு தான் இந்த நற்செய்தி..! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! 

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் இல்லத்தரசிகளுக்கு அரசு கூறும் நற்செய்தியை தான் கூறப்போகிறேன். அது என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். பொதுவாக நாம் அனைவருமே தினமும் ஏதாவது ஒரு உணவை சமைத்து சாப்பிடுகிறோம். உணவு சமைப்பதற்கு எதெல்லாம் தேவை என்று நாம்  அனைவருக்குமே தெரியும். அதிலும் இல்லத்தரசிகள் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் எண்ணெய் தான் அதிகமாக காலியாகிறது. கடையில் உணவு வாங்கும் விலையை விட எண்ணெய் வாங்கும் விலை தான் அதிகரித்துள்ளது. அதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு என்ன என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இல்லத்தரசிகளுக்கு மத்திய அரசு கூறும் நற்செய்தி என்ன..? 

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்

சமையல் எண்ணெயின் விலையை குறைக்கும் விதமாக சமையல் எண்ணெய் விலை குறைக்க வேண்டும் என்று எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிக்கை விடுத்துள்ளது. இதை எண்ணெய் நிறுவனங்களும் ஒப்புக் கொண்டிருப்பதால் விரைவில் சமையல் எண்ணெயின் விலை குறைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமையல் எண்ணெய்களை அதிகம் இறக்குமதி செய்யும் முக்கியமான நாடுகளில் இந்தியாவும் ஓன்று. நம் இந்தியா 2021-2022 நிதியாண்டில் ரூ.1.57 லட்சம் கோடி மதிப்புள்ள சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்துள்ளது.

இனி மின்சாரம் பயன்படுத்துவதை பொறுத்து கட்டணம் இல்லை.. தமிழ்நாடு மின்சார வாரியம் திடீர் கோரிக்கை

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்

இந்நிலையில் சமையல் எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் கனிசமாக குறைந்துள்ளது. ஆனால் அது மக்களுக்கு இன்னும் போய் சேரவில்லை. அதனால் விலை உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் சமையல் எண்ணெய் வகைகள் மீதான அதிக பட்ச சில்லறை விலையை குறைத்துள்ளன. அதேபோல எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் விரைவில் சமையல் எண்ணெய் MRP -யை குறைக்க முடிவு செய்துள்ளன.

மேலும், இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் அனைத்துமே சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை குறைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Latest News 👇👇ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 50 லட்சமா.. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement