ஆதார் கார்டு வைத்து இருந்தால் மட்டும் போதாது…! அதுல இப்படி ஒரு விஷயம் இருக்குறதும் தெரியனும்..!

Advertisement

ஆதார் கார்டு

ஆதார் கார்டை பற்றி நாம் ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆதார் கார்டு என்பது ஒரே ஒரு அட்டையாக இருந்தாலும் கூட அது பலவற்றைக்கு பயன்படும் ஒரு அடையாள அட்டையாக இருக்கிறது. இத்தகைய அடையாள அட்டையில் நிறைய புதுப்புது அப்டேட்டுகள் மற்றும் அம்சங்கள் வந்து உள்ளது. இவ்வளவு முக்கியமான ஆதார் அட்டையினை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாமல் இதில் ஏதாவது ஒரு பிழை ஏற்பட்டால் கூட அது நமக்கு பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் தான் நாம் எங்கு சென்றாலும் ஆதார் கார்டு முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆகவே ஆதார் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு இதுபோன்ற தகவல்கள் மட்டும் தான் தெரியும். ஆனால் இவை எல்லாம் தாண்டி ஆதார் கார்டில் வேறொரு விஷயமும் உள்ளது. அது என்ன விஷயம் மற்றும் அதில் என்ன உள்ளது போன்ற அனைத்தினையும் நம்முடைய பொதுநலம்.காம் பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா..  அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க.. 

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்:

ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே நாம் அரசு சார்ந்த சில சலுகைகளை பெற முடியும். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான.

பொதுவாக நாம் ஒரு வங்கிக்கு சென்றால் கூட அங்கு முதலில் ஆதார் கார்டு உள்ளதா..! என்று தான் வங்கி மேலாளர் முதல் அனைவரும் கேட்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் நம்முடைய ஆதார் எண்ணை யாரிடமும் பகிரக்கூடாது என்றும் சொல்வார்கள். அப்படி கூறுவது எதனால் என்றால்..?

நம்முடைய ஆதார் எண் மூலம் பண மற்றும் வெறும் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போவதற்கான வாய்ப்பு உள்ளதால் அப்படி கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் இறந்து போன ஒரு நபரின் ஆதாரை என்ன செய்வது என்ற கேள்வி நிறைய நபர்களுக்கு இருந்து வந்துள்ளது.

ஒரு நபர் இறந்து போய்விட்டால் அந்த நபருடைய இறப்பிற்கான சான்றிதழை முதலில் பெற வேண்டும். அதன் பின்பு அந்த சான்றிதழை வைத்து இறந்த நபரின் உடைய ஆதார் எண் Deactivate செய்யப்படும் என்றும் அவ்வாறு செய்த உடன் அந்த செய்தி இறந்தவரின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பானது மாநில அரசுடன் இணைந்து விரைவில் நடைமுறை படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் இறந்தவர் உடைய ஆதார் தவறுதலாக பயன்படத்த முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாற போகுதாம் மத்திய அரசு அறிவிப்பு…  தெரியலன்னா உடனே தெரிஞ்சுக்கோங்க… 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement