2000 ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவல்
ஹலோ நண்பர்களே..! என்ன நண்பர்களே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிவிடீர்களா..? இந்த கேள்வி ஏன் கேட்கிறேன் என்று பிறகு சொல்கிறேன். அதற்கு முன் பணம் என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியுமா என்று கேட்பது தவறு. ஏனென்றால் ஒரு மனிதனுக்கு பணம் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும் அல்லவா..! பணம் இருந்தால் தான் நாம் மனிதன். அப்படி ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். சரி தற்போது ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது. அதுபோல 2000 நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிகொள்ளவும் அல்லது டெபாசிட் செய்யவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யும் தெரியுமா..?
மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கூறிய தகவலை தெரிந்து கொண்டிருப்பீர்கள். இதனை தொடர்ந்து பலரும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.
சரி நீங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றினீர்களா..? அப்படி மாற்றி இருந்தால் இந்த கேள்வி உங்களுக்கு வந்திருக்க வேண்டுமே..? அதாவது திரும்ப பெறும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யும் தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி இங்கு காணலாம்.
வங்கிக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.. என்ன காரணம் தெரியுமா |
2000 ரூபாய் நோட்டுகள் நம் நாட்டில் 10.8% அளவிற்கு புழக்கத்தில் இருக்கின்றன. இதன் மதிப்பு 3.62 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
♦ ஏற்கனவே பழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை சரிபார்க்கும் ஒரு Currency Verification And Processing System (CVPS) என்ற அமைப்பை ரிசர்வ் வங்கி மீண்டும் அமல்படுத்த போகிறது.
♦ ஒவ்வொரு வங்கியும் பொதுமக்களிடம் இருந்து பெற்ற 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியானது இந்த Currency Verification And Processing System என்ற அமைப்பின் மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை சரிபார்க்கும்.
முக்கியமான வங்கிகள் என்று முதல் 3 இடத்தை பிடித்த வங்கிகள் எது தெரியுமா. |
♦ அப்படி CVPS என்ற அமைப்பின் மூலம் ஒரு மணி நேரத்தில் 60,000 நோட்டுக்களை சரிபார்க்க முடியும். இப்படி செய்வதன் மூலம் எது அசல் பணம், எது போலி பணம் என்பதைக் கண்டறிய முடியும்.
♦ பின் நல்ல 2000 ரூபாய் நோட்டுக்கள் வேறொரு Denamination மூலம் மீண்டும் பணமாக புழக்கத்திற்கு கொண்டுவரப்படும். அதாவது 2000 ரூபாய் தாள்கள் புதிய பணத் தாள்களாக மறு சுழற்சி செய்யப்படும். போலி நோட்டுக்கள் Compress செய்யப்பட்டு நிலக்கரித் தூளாக மாற்றப்படும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |