யூடியூப் சேனல் போல் வாட்சப் சேனல் வருகிறது..? இது மட்டும் தான் வாட்சப்பில் இல்லை..!

Advertisement

Whatsapp Channels Feature News Tamil

நம்மிடம் சொந்த வீடு இல்லாமல் கூட இருக்கலாம். அவ்வளவு ஏன் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் இருப்போம். ஆனால் நம்மிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருந்தது இல்லை. இப்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இதில் தான் பாதி நபர்கள் நேரத்தை செலவு செய்கிறார்கள். அந்த அளவுக்கு மாற்றம் அடைந்துள்ளது.

அதேபோல் நாம் எந்த பொருள் வாங்கினாலும் அதனை ஆன்லைன் மூலம் தான் வாங்குவார்கள். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் மாறிவருகிறது. இப்போது அதிக நபர்கள் ஸ்மார்ட் போன் மூலம் தான் சம்பாதித்து வருகிறார்கள். அது எப்படி என்றால் சிலர் யூடியூப் சேனல் மூலம் சம்பதிக்கிறார்கள். சிலர் ஆன்லைன் மூலம் வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். யூடியூப் சேனல் என்ற உடன் நியாபகத்திற்கு வருவது ஒன்று தான். வாட்சப்பில் இதுபோன்ற அம்சம் வருகிறது. அது என்ன அம்சம் அது எப்படி என்று இதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

Whatsapp Channels Feature News Tamil:

Whatsapp Channels Feature News

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸப் நிறுவனம் பயனர்களுக்கு உதவிடும் வகையில் நிறைய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதனை தொடர்ந்து இப்போது வாட்ஸப் நிறுவனம் மற்ற நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில் வாட்ஸப்பில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அது எப்படி என்று பார்க்கலாம்.

அது என்ன தெரியுமா யூடியூப் சேனல் போல் வாட்சப் சேனலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது யூடியூப் சேனல் போல் இதில் சேனல் உருவாக்கி அதனை சேனலில் உங்களுக்கு விருப்பனமான சேனலை சப்ஸ்கிரைப் (Subscribe) செய்து உங்களுக்கு பிடித்தமான அப்டேட்களை பெறலாம். இதில் நேரடியாக நிறுவனத்திற்கு செய்திகள்  அனுப்ப முடியும்.

இதில் என்ன வருத்தமான செய்தி என்றால் இதனை முதலில் 2 நாடுகளில் தான் அறிமுகம் செய்துள்ளது. தற்போது கொலம்பியா மற்றும் சிங்கப்பூர் என இரு நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்ய உள்ளது என்றும் அங்கு உள்ள தனி நபர்கள் மட்டுமே நிறுவனங்கள் வாட்ஸ்அப் சேனல்களை உருவாக்க முடியும்.

இந்த சேனலில் அட்மின் உறுதி அளித்த பின்பு தான் இதில் Subscribe அந்த சேனலில் இணைய முடியும். இதற்காக அப்டேட்ஸ் புதிய மெனு உருவாக்கி உள்ளது. இதில் பயனர்களுக்கு போன் நம்பர் எதுவும் காணப்படாது. இதில் அப்டேட் செய்யப்படும் அனைத்தும் 30 நாட்கள் மட்டுமே காணப்படும். தற்போது இந்த அப்டேட் 2 நாடுகளில் சோதனைகளின் அடிப்படையும் தான் உள்ளது.

அப்டேட்டூனா இப்படி தாங்க இருக்கனும் வேறு எதுல நம்ம வாட்சப்ல தான்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement