வாட்சப்பில் இது போல் மெசேஜ் வந்தால் ஓபன் செய்யாதீர்கள்
ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் வாட்ஸப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாக மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ் மற்றும் வாய்ஸ் கால், வீடியோ கால் போன்ற வசதிகள் இருக்கிறது. மேலும் வாட்சப் பயனாளர்களை மகிழ்விக்க பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வாட்சப்பில் வேலை தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு குறுந்செய்தியை அனுப்புகிறார்கள். இதனை பற்றிய முழு தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வாட்ஸப்பில் வேலை தருவதாக சொல்லி மோசடி:
தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இந்த மோசடிகள் வாட்ஸப் மூலமாகமாகவும் ஆரம்பித்து விட்டன.
லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் தேடுபவர்களில் 20 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களில் 56 சதவீதம் நபர்கள் மோசடிகளில் பாதிக்கப்படுவதாக Hirect நிறுவனம் தகவல் கூறியுள்ளது.
மெசேஜ் எப்படி வரும்:
வேலைக்கு ஆட்கள் தேவை என்ற பெயரில் sms அல்லது வாட்ஸப் மூலமாக மெசேஜ் ஆக வரும். அந்த மெசேஜ்-ல் வேலை உறுதி, தினமும் கொடுக்கும் சம்பளம் பற்றி அதிகமாக சொல்வார்கள். மேலும் இந்த மெசேஜ்-ல் ஒரு லிங்க் ஒன்று வரும். அதில் உங்களின் தகவல்களை கேட்கும், பதிவு கட்டணம் ஆன்லைனில் செலுத்த சொல்வார்கள்.
வருகிறது ரேஷன் கடைகளில் மாற்றம்..! மக்களுக்கு தான் அடிக்கிறது லக்..!
wa.me என்று ஆரம்பிக்கும் லிங்க் இருக்கும், இதனை கிளிக் செய்தால் கூடுதல் விவரங்களை கேட்கும். அதற்கான எந்த பதிலையும் நாம் அளிக்க கூடாது.
ஆன்லைன் மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி.?
வேலை தேடுபவர்களை குறி வைத்து வேலை வாய்ப்பு என்ற பெயரில் சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் nakuri.com, shine.com போன்ற வேலை தேடும் வலைத்தளங்களிருந்து மொபைல் நம்பர், கல்வி தகுதி, ஈமெயில் முகவரி, பணி அனுபவம் போன்ற தகவலை திருடுகின்றனர். இந்த தகவலை வைத்து பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி பொய்யான தகவலை தெரிவிக்கின்றனர்.
வேலை கொடுப்பவர்கள் யாரும் பதிவு, நேர்காணல், ஆவணம் சரி பார்த்தால் போன்ற விஷயங்களுக்காக பணம் கேட்க மாட்டார்கள். அதனால் வேலைவாய்ப்புக்காக பணம் செலுத்த வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மெயில் மற்றும் வாட்சப் மூலம் வேலைவாய்ப்பு தகவலை பற்றி அது உண்மையா என்று அறிய வேண்டும் டெல்லி போலீஸாரின் சைபர் கிரைம் பிரிவு எச்சரித்துள்ளது.
பேருந்து பயணம் குறித்து தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு என்னப்பா சொல்றீங்க அப்புடியா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |