அடடே இது அல்லவா அப்டேட்..! வாட்சப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் மெட்டா..!

Advertisement

வாட்சப் அப்டேட் 

வணக்கம் நண்பர்களே..! நீங்கள் வாட்சப் பயன்படுத்துகிறீர்களா..? இதென்ன கேள்வி என்று நினைப்பீர்கள். உண்மை தான் நான் கேட்கும் கேள்வி தவறு. ஏனென்றால் இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி  வருகின்றனர். இவ்வளவு ஏன் விவரம் தெரியாத குழந்தைகளுக்கு கூட ஸ்மார்ட் போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.

அந்தளவிற்கு நாம் வாழும் காலகட்டம் மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போந்தான் இருக்கிறது. சரி அதை விடுங்க. அப்படி நாம் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமான ஓன்று தான் வாட்சப். அதுபோல வாட்சப் நிறுவனமும் அதன் பயனர்களுக்காக பல அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யும் அப்டேட் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Screen Sharing அம்சத்தை அறிமுகம் செய்யும் மெட்டா..! 

whatsapp to soon support screen sharing

வாட்சப்பில் பல அம்சங்களை அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம் தற்போது அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வாட்சப் நிறுவனமான மெட்டா அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் வாட்சப் ஸ்கிரீன் சேரிங் (Screen Sharing) அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதை பற்றி இங்கு காண்போம்.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அப்டேட்களை வழங்கி வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது Microsoft Teams மற்றும் Google Meet, Google Zoom போன்ற வீடியோ Conferencing தளங்களில் உள்ளது போல் வாட்ஸ்அப்பிலும் ஸ்கிரீன் ஷேரிங் (Screen Sharing) அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. 

அப்டேட்னா இப்படி இருக்கணும்.. வாட்சப் பயனர்களே உங்களுக்கு தான் இந்த அப்டேட் தெரிஞ்சிக்கோங்க

whatsapp to soon support screen sharing

இதற்கு காரணம் ஆன்லைன் அலுவலக மீட்டிங் போன்றவற்றில் Teams மற்றும் Zoom போன்ற செயலிகளில் ஸ்கிரீன் ஷேரிங் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஒருவர் தனது வேலை குறித்த அறிக்கை அல்லது நிலை அறிக்கைகளை Presentation ஆக ஆன்லைனில் பலருடன் பகிர்ந்து ஆலோசிப்பது ஆகும்.

மற்ற செயலிகளில் இருப்பது போல வாட்சப்பிலும் Screen Sharing வசதியை அறிமுகம் செய்வதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. இந்த அம்சம் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தும் இரு தரப்பினரும் ஆப்ஸின் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்பேட் செய்யப்பட வேண்டும். அப்போது தான் ஸ்கிரீன் ஷேர் செய்ய முடியும். ​​

இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போறீங்களா.. அப்போ ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்களை தெரிஞ்சிக்கோங்க

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement