2025 ஆம் ஆண்டு IPL போட்டியில் இருந்து ஓய்வு பெரும் வீரர்கள் இவர்கள் தானா?

Advertisement

IPL  Match 2025 | ஐபிஎல் தொடர் 2025

கிரிக்கெட் விளையாட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். அதுவும் ஐபிஎல் வந்துட்டாலே போதும் வீட்டில் உள்ள அனைவரும் தொலைக்காட்சி முன் தான் உட்காந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஐபிஎல் போட்டியில் இருந்து குறிப்பிட்ட வீரர்கள் ஓய்வு பெற போகிறார்கள். இது தான் அவர்களுக்கு கடைசி ஐபிஎல் ஆக இருக்கப்போகிறது. எந்த எந்த வீரர்கள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள் என்பதை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.

ஐபிஎல் புடிக்காதவர்கள் என யாருக்கே இருக்க மாட்டார்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறாரகள் என்று ஆர்வமாக கடைசி போட்டி வரை காத்திருப்பார்கள். ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐ பிஎல் போட்டி யாருக்கெல்லாம் கடைசி ஐபிஎல் ஆக இருக்கப்போகிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.

IPL Players Who Miss The 2025 IPL Match In Tamil

ஐபிஎல் தொடர் 2025:

எம். எஸ். தோனி CSK:

இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் இருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். இதுவரை இவர் 264 போட்டிகளில் விளையாடி 5,243 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டி ரசிகர்களின் தல என்று அழைக்கப்படும் எம். எஸ். தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூ பிளசிஸ் DC:

தென்னாப்பிரிக்காவின் மூத்த நட்சத்திர வீரரான டூ பிளசிஸ் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார். இவருக்கு தற்போது 40 வயதாகிவிட்ட நிலையில் , இந்த ஐபிஎல் தொடருடன் இவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வின் CSK:

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இவருக்கு தற்போது 38 வயதாகிவிட்ட நிலையில், இந்த ஐபிஎல் தொடருடன் இவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொயீன் அலி CSK:

சிறந்த ஆல் ரவுண்டரான மொயீன் அலி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த ஐபிஎல் தொடருடன் இவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஷாந்த் சர்மா GT:

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடுகிறார். இதுவரை 110 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 93 விக்கெட்களை எடுத்துள்ளார். இத்தகைய சிறப்பான வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, இந்த ஐபிஎல் தொடருடன் இவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 News

 

Advertisement