புதிய அறிவிப்பு…! ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் எடுக்கவில்லையா இனி பயப்பட வேண்டாம்..!

without ticket in ladies passenger train rules in tamil

ரயில் டிக்கெட்

பொதுவாக நாம் அனைவரும் நிறைய வகையான பயணங்களை மேற்கொண்டிருப்போம். அத்தகைய பயணங்கள் அனைத்தும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அனுபவத்தை கொடுக்கும். அதனை நாம் மற்றவரிடம் கேட்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக தான் கூறுவார்கள். அந்த வகையில் நாம் கார் மற்றும் பைக் பயணத்தை தவிர வேறு எந்த மாதிரியான பயணத்தில் செல்ல வேண்டுமானாலும் டிக்கெட் பெறுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு டிக்கெட் பெறுவது என்பது யாராக இருந்தாலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே நிலையம் ஆனது அறிவித்துள்ளது. ஆகையால் அத்தகைய அறிவிப்பினை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்திய ரயில்வே பயணிகள்:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பக்கூடிய ஒரு பயணம் என்றால் அது ரயில் பயணம். இந்த ரயில் பயணம் ஆனது குறைவான நேரத்தில் நம்மை விரைவாகவும், பாதுகாப்பாகவும் கொண்டுபோய் சேர்க்க செய்கிறது.

இவ்வாறு பயணம் செய்யும் ரயில்வே பயணிகளுக்காக தென்னக ரயில்வே நிலையம் ஆனது நிறைய திட்டங்கள் மற்றும் அம்சங்களை அறிமுகம் செய்து உள்ளது.

அந்த வகையில் பார்த்தோம் என்றால் மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் என இவர்கள் எல்லாம் நிறைய சலுகைகளை இதுநாள் வரையிலும் பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இப்போது மற்றொரு அம்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் இந்த சலுகைளை ஆனது முற்றிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனிற்காக அறிமுகம் செய்யப்பட்டதாகும். மேலும் படிக்க

அதாவது நாம் சாதாரணமாக பயணம் செய்வதற்கும் அவசரம் அவசரமாக பயணம் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். நாம் அவசரமான சூழ்நிலையில் பயணம் செய்யும் போதும் ரயிலிற்கு சில நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாமல் போகும் சூழ்நிலையும் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு டிக்கெட் பெறவில்லை என்றால் ரயிலில் சோதனை செய்யும்போது கீழே இறக்கி விடும் நிலைமை கூட வர வாய்ப்பு உள்ளது. ஆனால் இனி இது மாதிரி நடக்காது.

ஏனென்றால் பெண்கள் அல்லது குழந்தகைகள் இரவு நேரத்தில் பயணம் செய்யும் போதும் அவசரமான சூழ்நிலையுடன் கூடிய காரணத்தினால் ரயிலில் டிக்கெட் பெறாமல் பயணம் செய்தால் TTR அவர்களை பாதிலேயே இறக்கி விட கூடாது என்று ரயில்வே நிலையம் ஆனது குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது இரவு நேரத்தில் மற்றும் அவசரமான சூழ்நிலை இந்த இரண்டிற்கு மட்டும் என்றும், ஒருவேளை TTR ரயிலில் இருந்து இறக்கி விட்டால் பயணிகள் பெண் ரயில்வே ஆணையத்திடம் புகார் கூறலாம் என்று தெரிவித்துள்ளது.

Latest News👉👉  Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.. மே 10 -ம் தேதிக்கு பிறகு கூகுளின் தலையெழுத்தே மாறப்போகிறது.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil