Women Free Travel in Government Buses
ஹலோ நண்பர்களே..! இன்று நான் பொதுநலம் பதிவின் அன்பு வாசகர்களுக்கு ஒரு குட் நியூஸை சொல்ல போகிறேன்..! அது என்ன குட் நியூஸ் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். இனி பெண்கள் அனைவரும் இலவசமாக பேருந்தில் பயணம் செல்லலாம். இந்த நல்ல செய்தி உங்களுக்கு தெரியுமா..? இதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்..!
UPI மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள் இனி அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விஷயம் தெரியுமா உங்களுக்கு |
பேருந்தில் செல்லும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்..!
பேருந்தில் செல்லும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேர்தலின் போது தி.மு.க தரப்பில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் உடனடியாக அறிமுகம் செய்யப்பட்டது.
கட்டணமில்லா பேருந்து சேவையின் மூலம் இன்று பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று சட்டசபையில் போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சலுகை அளிக்கப்படுவதாக அதாவது பேருந்தில் கட்டணமில்லா பயணத் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதம் ரூ.888 வரை சேமிப்பு ஏற்படுவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பான், ஆதார் வைத்திருப்பவர்கள் இதை முக்கியம் தெரிந்துகொள்ளுங்கள் |
மேலும் பேருந்தில் ஒரு நாளில் மட்டுமே 40 லிருந்து 50 சதவிகிதம் பெண்கள் பயணிப்பதாக கூறியுள்ளது. அதனால் தான் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது என்றும், இதன் காரணமாக ஒவ்வொரு பெண் பயணியும் மாதம் ஒன்றுக்கு ரூ.888 வரை சேமிக்கின்றனர் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் 45.51 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர் என்றும் கூறுகிறது. மேலும் இந்த இலவச பயண திட்டத்தால், அரசு பேருந்துகளில் பயணித்த பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 64.65 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் கார்டு வைத்து இருந்தால் மட்டும் போதாது அதுல இப்படி ஒரு விஷயம் இருக்குறதும் தெரியனும்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |