World’s Most Expensive Water Cost in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவு உங்களுக்கு ஆச்சர்யம் நிறைந்த பதிவாக இருக்கும். அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பீர்களா..? இது என்ன கேள்வி தண்ணீர் இல்லையென்றால் எப்படி உயிர்வாழ முடியும் என்று சொல்வீர்கள். சரி அதை விடுங்க..! இப்போது நாம் வெளியூர் செல்கிறோம். அப்போ நமக்கு தண்ணீர் தாகம் எடுக்கும். அந்த நேரத்தில் கடைகளில் வாட்டர் பாட்டில் வாங்கி தாகத்தை போக்கி கொள்வோம். இல்லையென்றால் நாம் வீட்டிலிருந்தே வாட்டர் பாட்டில் எடுத்து செல்வோம். பொதுவாக வாட்டர் பாட்டில் கடைகளில் 10 ரூபாயில் இருந்து விற்கப்படுகிறது. ஆனால் 50 லட்சத்திற்கு தண்ணீர் பாட்டில் இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 50 லட்சமா..?
ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 50 லட்சமா என்று ஆச்சர்யமாக பார்ப்பீர்கள். பொதுவாக நாம் வாழும் உலகில் அனைவரும் பணக்காரர் என்று சொல்ல முடியாது. அதேபோல அனைவரும் ஏழை என்றும் சொல்லிவிட முடியாது.
அந்த வகையில் சில பணக்காரர்கள் உலகில் மிக விலை உயர்ந்த தண்ணீரை பருகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Acqua di Cristallo Tributo a Modigliani என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிக விலை உயர்ந்த நீரானது ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கார்டு பயனாளருக்கு இனி இந்த பொருட்கள் எல்லாம் இலவசமாக வழங்கப்படும்.. மிஸ் பண்ணிடாதீங்க |
அதுமட்டுமில்லாமல் இந்த Acqua di Cristallo Tributo a Modigliani என்ற பாட்டிலானது உலகின் மிக விலையுயர்ந்த பாட்டில் மற்றும் 2010 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது. இந்த தண்ணீர் இத்தனை விலை உயர்ந்ததாக இருப்பதற்கான காரணம் அதன் பேக்கேஜிங் ஆகும்.
அதிக விலைக்கு காரணம் என்ன..?
இந்த பாட்டிலானது 750 மில்லி தண்ணீரைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் விலை 50 லட்சம் ஆகும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதன் தனித்துவமான பேக்கேஜிங் மற்றும் வடிவமைப்பு தான்.
Latest News👇👇 சிலிண்டரின் விலை அதிரடியாக 171 ரூபாய் குறைவு.. மகிழ்ச்சியில் மக்கள்..
அது என்னவென்றால், இந்த பாட்டில் 24 காரட் தங்கத்தால் ஆனது. அதேபோல் பாட்டிலுக்குள் இருக்கும் தண்ணீரிலும் சுமார் 5 கிராம் 24 காரட் தங்கம் உள்ளது. இது தண்ணீருக்கு காரத்தன்மையை சேர்க்கிறது. இந்த பாட்டிலில் உள்ள தண்ணீர் ஐஸ்லாந்து, பிஜி மற்றும் பிரான்ஸ் பனிப்பாறைகள் போன்ற உலகின் தூய்மையான இடங்களிலிருந்து பெறப்படுகிறது.
இந்த தண்ணீர் பாட்டிலானது புகழ்பெற்ற கலைஞரான பெர்னாண்டோ அல்டமிரானோவால் வடிவமைக்கப்பட்டது. அவர் வடிவமைத்த பாட்டில் 2010 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று 60,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு 49 லட்சம் ஆகும்.
Latest News👇👇 போஸ்ட் ஆபிஸில் PPF கணக்கு வைத்திருக்கிறீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |