X Payment Feature Coming Soon in Tamil
இன்றைய சூழலில் அனைவருடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அப்படி நம்மிடம் உள்ள ஸ்மார்ட் போனில் நமக்கு தேவையான அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு நமக்கு உதவுவது பலவகையான சமூக வலைத்தளங்கள் மற்றும் செயலிகளும் தான். அப்படி உள்ள சமூக வலைத்தளங்களும் நாளுக்கு நாள் மிகவும் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டு வருகின்றது. அதாவது இன்றைய சூழலில் அனைத்திற்கும் ஒரு செயலி உள்ளது.
அதேபோல் தான் நாம் நமது தகவல் பரிமாற்றம் செய்வதற்கு மற்றும் பொழுது போக்கு செய்திகளை அறிந்து கொள்வதற்கும் பயன்படும் ஒரு செயலி தான் இந்த X என்று அழைக்கப்படும் முன்னால் ட்விட்டரில் ஒரு புதிய சேவை வர போகின்றது என்று அதன் உரிமையாளரான எலோன் மஸ்க் சமீபத்தில் கூறியுள்ளார். அது என்ன சேவை அது எப்பொழுது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பதை எல்லாம் இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
X-ன் பணபரிமாற்ற சேவை:
Twitter என்று இருந்த தளத்தை X என்று மாற்றியது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான். தற்பொழுது X-ஐ ஒரு அனைத்திற்கும் பயன்படும் செயலியாக மாற்றும் தனது இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருவதாக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் ARK இன்வெஸ்டின் Cathie Wood உடன் டிசம்பர் 21 அன்று நடைபெற்ற ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதாவது X தளத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் பணம் பரிமாற்ற சேவைகள் முழுமையாக தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். X தளத்தில் முழுமையாக பண பரிமாற்ற சேவைகள் தொடங்குவதற்கு சில பல உரிமங்கள் ஒப்புதல்கள் கிடைப்பதற்காக காத்து கொண்டிருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.
இதனை பற்றி அவர் விரிவாக கூறுகையில் ஒப்புதல் பெறுவதற்கு தேவையான அனைத்து விண்ணப்பங்களையும் அனுப்புவதில் X சற்று தாமதமாகிவிட்டதாக கூறினார். அதேபோல் X இன் வரவிருக்கும் கட்டண அம்சத்துடன் கிரிப்டோவை ஒருங்கிணைக்கும் திட்டம் எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
மாறாக, க்ரோக் எனப்படும் தனது சொந்த GenAI முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, டிஜிட்டல் சொத்துக்களைப் பற்றி சிந்திக்க “எந்த நேரமும்” செலவிடுவதில்லை என்று மஸ்க் கூறினார்.
சமைப்பது முதல் பரிமாறுவது வரை AI தான் மனிதர்களுக்கு வேலை இல்லை
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |