பிப்ரவரி 1 முதல் யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு.. பணம் மழை பொழியப்போகிறது..!

YouTube to Share Ad Money With Shorts Creators From Feb 1

YouTube to Share Ad Money With Shorts Creators From Feb 1

யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு குட் நியூஸ்.. அது என்ன குட் நியூஸ் என்று அறிந்துகொள்ள ஆசையா..? அப்படி என்றால் பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள். பிப்ரவரி முதல் தேதியிலிருந்து யூடியூப் நிறுவனம் ஷார்ட்ஸ் வீடியோ கிரியேட் செய்து வழங்குபவர்களுடன் விளம்பர வருவாயை பகிர உள்ளது. ஆக யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு இது குட் நியூஸ் தானே.. இருந்தாலும் இந்த அறிவிப்பில் சில நிபந்தனைகள் உள்ளதாம் அந்த நிபந்தனைகள் குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
YouTube யூஸ் பண்ணா மட்டும் பத்தாது..! அதுல எவ்வளவு ட்ரிக்ஸ் இருக்குனு தெரிஞ்சிக்கணும்..!

பிப்ரவரி 1 முதல் யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு.. பணம் மழை பொழியப்போகிறது..!YouTube to Share Ad Money With Shorts Creators From Feb 1

டிக்டாக் ஆப் தடை செய்த பிறகு யூடியூப் ஷார்ட்ஸ் தளம் பீட்டா வெர்ஷனாக அறிமுகம் செய்தது உலக அளவில் ஷார்ட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் 15 முதல் 60 நொடிகள் வரை Portrait Mode-யில் பயனர்கள் இதில் வீடியோக்களை பார்க்கலாம் மற்றும் பகிரலாம்.

இதற்கான பயனர்கள் அதிகரித்த காரணத்தினால் விளம்பர வருவாயை பகிர்வது குறித்த யூடியூப் நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த அறிவிப்பில் வெளியாகியுள்ளது என்னெவென்றால் வீடியோ கிரியேட்டர்கள் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இணைந்தால் மட்டுமே பயன் பெற முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல இந்த புரோகிராமில் ஏற்கெனவே இணைந்துள்ள பயனர்கள் புதிய விதிகளுக்கு தங்கள் ஒப்புதலை தெரிவிக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. அதற்கான கெடு வரும் ஜூலை 10 வரையில் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

வீடியோ கிரியேட்டர்கள் ஷார்ட் வீடியோக்கள் மூலம் பணம் பார்க்க விரும்பினால், அதற்கென தகுதிகளை நிர்ணயித்துள்ளனர். தங்கள் ஷார்ட் வீடியோக்களை பணமாக்க நினைப்பவர்கள், ஆயிரம் Subscriber-ஐ பெற்றிருக்க வேண்டும் மற்றும் அவர்களது ஷார்ட் வீடியோக்கள் 90 நாட்களில் 1 கோடி பார்வைகளை பெற்றிருக்க வேண்டும். இத்தகுதியை பூர்த்தி செய்யும் கிரியேட்டர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Youtube App யூஸ் பண்றீங்களா ..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

ஷார்ட் வீடியோ இடையே வரும் விளம்பரத்தை எத்தனை நபர் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து பணம் தங்களுக்கு வழங்கப்படும். ஷார்ட் வீடியோக்களில் மியூசிக் பயன்படுத்தியிருந்தால், எத்தனை டிராக் உள்ளதோ, அந்தந்த மியூசிக் பார்டனர்களுக்கும் தொகை பிரித்து அளிக்கப்படும். மியூசிக் இல்லாமல் சொந்த ஆடியோ என்றால் தொகை முழுவதுமாக வீடியோ கிரியேட்டர்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
SHARE