வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Updated On: July 4, 2023 12:51 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Novel Writer Andal Priyadarshini History in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..! தமிழ் மொழியில் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. இந்த புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள் நல்ல கருத்துக்களை கூறி சிறப்பாக படைத்துள்ளனர். அந்த வகையில் சுருதி பிசகாத வீணை என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இந்த பதிவில் அவரின் வாழ்க்கை வரலாறு, அவரின் படைப்புகள் பற்றி விரிவாக காணலாம்.

Andal Priyadarshini Biography in Tamil:

Andal priyadarshini biography in tamil

ஆண்டாள் பிரியதர்ஷினி ஒரு தமிழ் மொழி கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும் ஆவார். தற்போது இவர் கோயம்புத்தூர் பொதிகை தொலைக்காட்சி ஒளியலை வரிசையின் தலைமை செயலராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் தற்கால பெண் படைப்பாளர்களின் குறிப்பிட தகுந்தவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் கவிஞர் ஆ.கணபதி புலவர் – சுப்புலட்சுமி ஆகியோருக்கு 05.10.1962 அன்று பிறந்தார்.

ஆண்டாள் பிரியதர்ஷினி சென்னை சாரதா வித்யாலயாவில் தனது பள்ளிப்படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரிப்படிப்பையும் முடித்து, பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளம் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இவரின் கணவர் கவிஞர் பால ரமணி ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்=> புத்தகங்களைக் காதலித்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

படைப்புகள்:

இவர் கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, திறனாய்வு என இதுவரை பல படைப்புகளைப் படைத்துள்ளார்.

புத்தகங்கள்:

  • சுருதி பிசகாத வீணை
  • விடிவைத் தேடி
  • புதிய திருப்பாவை

புதினங்கள்:

  • தகனம்
  • கனவுகள் கைப்பிடிக்குள்
  • முதல் ஒளிபரப்பு ஆரம்பம்
  • தாளம் தப்பிய தாலாட்டு

குறும் புதினங்கள்:

  • சிகரம்சிலந்திக்கும் எட்டும்
  • கதாநாயகி
  • சாருலதா
  • வேடிக்கை மனிதர்கள்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • சுருதி பிசகாத வீணை
  • ரிஷிமு்மனுஷீயும்
  • தோஷம்
  • தலைமுறைதாகம்
  • பெருமூச்சின் நீளம்

கவிதைத் தொகுப்புகள்:

  • புதிய திருப்பாவை
  • சுயம் பேசும் கிளி
  • முத்தங்கள் தீர்ந்துவிட்டன
  • சூரியனை விடிய வைப்போம்
  • தோகையெல்லாம் துப்பாக்கிகள்

கட்டுரைகள்:

  • பெண் எழுத்து
  • விடிவைத்தேடி
  • தேசம் மிச்சமிருக்கும்

விருதுகள்:

  1. கவிதைகளுக்காக 2000ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து விருது
  2. தோஷம் சிறுகதைக்காக லில்லி தேவசிகாமணி விருது
  3. உண்டியல் கதைக்காக பாவலர் முத்துசாமி விருது
  4. கழிவு சிறுகதைக்காக இலக்கியச்சிந்தனை விருது
  5. சுயம்பேசும் கிளி கவிதைத் தொகுப்பிற்காக நாகப்பன் ராஜம்மாள் விருது
  6. துகனம் புதினத்திற்காக காசியூர் ரங்கம்மாள் விருது
  7. அவனின் திருமதி, தீ, தோஷம் சிறுகதைகள் ஆனந்த விகடன் வைரவிழாவில் 5000ரூ ஒவ்வொன்றும் பரிசு பெற்றன.
  8. தினமணி புத்தக கண்காட்சியில் 3000ரூ பரிசு.
  9. சாணஅடுப்பும்,சூரிய அடுப்பும் இந்திய அரசின் பரிசு பெற்றது.

பட்டங்கள்:

  1. நெல்லை இலக்கிய வட்டம் எழுத்துலகச்சிற்பி பட்டம் வழங்கியுள்ளது.
  2. தேனீஇலக்கிய கழகம் கவிச்செம்மல்.

சிறப்புகள்:

  1. 2003ல் டிசம்பர் 11 பாரதியார் பிறந்தநாள் விழாவில் அன்றைய இந்தியக் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தலைமையில் கவியரங்கத்தில் கவிதை வாசித்தார்.
  2. சாகித்ய அகாதமி பெண் படைப்பாளர் படைப்புகள் தொகுதியில் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது.
  3. பெண்கவிஞர்களின் தொகுப்புநூலான பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பில் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது.

பாடநூல்களில் படைப்புகள்:

  1. வானவில் வாழ்க்கை ஸ்டெல்லாமேரி கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  2. கதாநாயகி கேரளா பல்கலைக்கழகத்தில் பள்ளி இறுதி வகுப்பிற்குப் பாடத்திட்டமாக உள்ளது.
  3. தகனம் திருச்சி ஜெயின்ட்ஜோசப் கல்லூரியில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்=> யுவ புரஸ்கார் விருதை பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் பற்றிய தகவல்கள்…!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now