அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதையின் ஆசிரியர் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Novel Writer Ashokamitran History in Tamil

Novel Writer Ashokamitran History in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! நம் தமிழ் மொழியில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்தையும் எழுத்தாளர்கள் கருத்துடனும் சிறப்பாகவும் வடிவமைத்து இருக்கிறார்கள். அப்படி புத்தகங்களை எழுதி அதன் மூலம் புகழ்பெற்ற ஒருவரை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இவர் தமிழ் மொழியில் சிறுகதைகள், நாவல்கள் போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார். அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் அசோகமித்திரன் அவர்களின் வரலாற்றை பற்றி தான் பார்க்க போகிறோம்..!

புத்தகங்களைக் காதலித்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

அசோகமித்திரன் வரலாறு: 

Novel Writer Ashokamitran History in Tamil

தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான அசோகமித்திரன் அவர்கள் 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஜகதீச அய்யர் மற்றும் பாலாம்பாள் என்ற தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருடைய தந்தை ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய இயற்பெயர் தியாகராஜன். 

இவர் செகந்திராபாத் என்னும் நகரில் தனது பள்ளி படிப்பை பயின்றார். பின் இவர் மெஹ்பூப் கல்லூரி மற்றும் நிஜாம் கல்லூரியில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்து வந்தார்.

1952 ஆம் ஆண்டு இவருடைய தந்தை மறைந்த பின், இவர் குடும்பத்துடன் சென்னை மாகாணத்திற்கு குடிபெயர்ந்தார். பின் இவர் தந்தையின் நண்பர்  ஒருவரின் உதவியுடன் ஜெமினி ஸ்டுடியோவில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றினார். ஜெமினி ஸ்டுடியோ அதிபர் S.S. வாசனின் உதவியாளராகவும் பணியாற்றி வந்தார்.

ரமணி சந்திரன் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

அசோகமித்திரன் சிறப்புகள்: 

அதுபோல  இவர், இக்காலத்தை பற்றி Illustrated Weekly என்ற நினைவுக் குறிப்புகளை எழுதியுள்ளார். இந்த நினைவு குறிப்புகள் My Years with Boss என்ற பெயரில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன.  

இவருடைய எழுத்து எளிமையாகவும் நகைச்சுவையும் கொண்டதாக இருக்கும்.  இவரது கதைகள் தமிழ் இலக்கியத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்று  தந்தன.

அசோகமித்திரன் அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்ததற்கான தனிப்பெருமையை பெற்றார். இவர் எழுதிய நாவல்கள் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

 1996 ஆம் ஆண்டு இவர் எழுதிய அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். 

அதுமட்டுமில்லாமல், இலக்கியசிந்தனை விருது, லில்லி தேவசிகாமணி நினைவுப்பரிசு, இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது, அக்னி அக்ஷரா விருது, எம்.ஜி.ஆர் விருது, தேசிய இலக்கிய விருது, பாரதீய பாஷா அறக்கட்டளை விருது மற்றும் திரு.வி.க. விருது போன்ற விருதுகளை இவருடைய நாவல்கள் பெற்று தந்தன.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றிய தகவல்கள்..!

சிறுகதைகள்:

 1. அப்பாவின் சிநேகிதர்
 2. உண்மை வேட்கை
 3. காலமும் ஐந்து குழந்தைகளும்
 4. தந்தைக்காக
 5. நாடகத்தின் முடிவு
 6. பிப்லப் சௌதுரியின் கடன்
 7. முறைப்பெண்
 8. வாழ்விலே ஒருமுறை
 9. விமோசனம்

நாவல்கள்:

 1. ஆகாசத்தாமரை
 2. இன்று
 3. ஒற்றன்
 4. கரைந்த நிழல்கள்
 5. தண்ணீர்
 6. பதினெட்டாவது அட்சக்கோடு
 7. மானசரோவர்

குறுநாவல்கள்: 

 1. இருவர்
 2. விடுதலை
 3. தீபம்
 4. விழா மாலைப் போதில்

அதுபோல அசோகமித்திரன் 1956 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு அவர் மறையும் வரை 337 கதைகள் எழுதியுள்ளார். இவர் 279 சிறுகதைகள், 8 நாவல்கள், 14 குறுநாவல்கள், 16 கட்டுரைகள், 3 மொழிபெயர்ப்புகள், 15 ஆங்கில நூல்கள் மற்றும் 2 மலையாள நூல்கள் என்று 337 கதைகள் எழுதியுள்ளார்.

தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள்
தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil