புத்தகங்களைக் காதலித்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Lakshmi Krishnamurthy Biography in Tamil

அன்பு நேயர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் புத்தகங்களைக் காதலித்த திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார். திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழின் முதல் பெண் பதிப்பாளர் என்று போற்றப்படுகிறார். அதுபோல லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் அவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ரமணி சந்திரன் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வரலாறு:

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வரலாறு

இவர் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி சத்தியமூர்த்தி என்பவர்க்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை விடுதலைப் போராட்ட வீரரும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார்.

திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வீணை வாசிப்பு, குதிரையேற்றம், ஓவியம், இசை என பல கலைகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளையும் கற்றுள்ளார்.

இவர் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை மணம் முடித்துக் கொண்டார். பின் இவர் லட்சுமி என்ற பெயரை லட்சுமி கிருஷ்ணமூர்த்தி என்று மாற்றி கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார். அதுபோல இவர் “நான் அதிகமாக புத்தகங்களை தான் காதலித்தேன்” என்று கூறியுள்ளார்.

இவருடைய தந்தை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறை பிடிக்கப்பட்டு உடல்நலக் குறைவால் அங்கேயே மரணமடைந்தார். பின் இவர் தன் கணவருடன் கேரளாவில் குடி பெயர்ந்தார்.

இதையும் படியுங்கள்⇒ தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி சிறப்புகள்: 

இவர் தமிழ் மொழியின் முதல் பெண் பதிப்பாளர் என்றும் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்றும் போற்றப்படுகிறார். இவர் தன் தந்தையுடன் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

மேலும் இவர் அரசியல்வாதியாக சமூக இலக்கியப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டு பல சேவைகளை செய்துள்ளார். அதுபோல, திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய வாசகர் வட்டம் என்ற அமைப்பும் அதன் செயல்பாடுகளும் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

இவர் பெண்களுக்கான இலவச மருத்துவமனையை தன் இல்லத்தில் நடத்தி வந்தார். இவர் 1964 முதல் 1970 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

பின் சில ஆண்டுகளில் அரசியலிலிருந்து விலகி, சமூக மற்றும் இலக்கியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு பல சேவைகளை செய்துள்ளார்.

இவர் கல்கி, சுதேசமித்திரன், ஹிந்து என பல இதழ்களில் கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அதுபோல இவர் தொடர்ந்து சமூக பணிகளில் அக்கறை காட்டி வந்தார். பின் இவர் 1987-ல் சத்தியமூர்த்தி ஆய்வு மையம் (Satyamurti Centre for Democratic Studies) என்னும் அமைப்பை தொடங்கினார்.

பெண்ணாக இருந்து பல சாதனைகளை படைத்து, அதுபோல பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ள லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன் 83-ஆம் வயதில் 2009 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி காலமானார்.

தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள்

எழுதிய நூல்கள்:

இவர் 1964 ஆம் ஆண்டு “வாசகர் வட்டம்” என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நல்ல புத்தகங்களை வெளியிட்டார்.

  • ஐந்தாவது சுதந்திரம்
  • At the threshold of life- The Satyamurti Letters

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட நூல்கள்:

  • சோக்ரதர்
  • ஆத்ம சிந்தனை
  • அம்மா வந்தாள்
  • வேள்வித் தீ
  • புனலும் மணலும்
  • பள்ளிகொண்டபுரம்
  • அபிதா
  • புத்ர நாவல்
  • நேற்றிருந்தோம்
  • ஆத்மாவின் ராகங்கள்
  • கோபல்ல கிராமம்
  • வேரும் விழுதும்
  • மாயத்தாகம்
  • கடலோடி
  • சாயாவனம்
  • புனலும் மணலும்
  • காசளவில் ஓர் உலகம்
  • தமிழில் உரைநடை
  • பூனைக்கண்
  • மண்ணில் தெரியுது வானம்
  • யாவரும் கேளிர்
  • அரையும் குறையும்
  • மன்னும் இமயமலை
  • அற்பஜீவி
  • போதையின் பாதையில்
  • இந்துமத நோக்கு
  • இந்திய ஓவியம்
  • குறுநாவல் தொகுப்பு
  • குயிலின் சுருதி

மொழிபெயர்த்த நூல்கள்:

  • அறிவின் அறுவடை
  • தமிழர் பண்பாடும் வரலாறும்
  • எட்வின் கண்ட பழங்குடிகள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement